இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிஷ்டவசமானது: தலைமை நீதிபதி வேதனை

1/31/2020 2:20:11 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிஷ்டவசமானது  என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். சிஐஎஸ்எப் பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்த கோரிய வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஏ.பிசாஹி, ‘தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில்  அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது ஏற்க கூடியதல்ல. இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஹரிப்பரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனை அளிக்கிறது. இது நீதிமன்றத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்றதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது இவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் பேரணியில் பங்கேற்றது நீதிபதிகள் மாண்பை சீர்கெடுக்கும் செயலாக உள்ளது.

நீதிமன்றத்திற்கு இந்த பேரணியின் போது பிரச்சனை நிகழ்ந்திருந்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது? நீதிமன்றம் பொது சொத்து, தனி நபர்களானது அல்ல என்பது ஓய்வு பெற்ற நீதிபதிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் நீதிபதிகளாக கருதப்படுவர். அவ்வாறு இருக்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படலாமா? இதை மன்னிக்கவே முடியாது. போராட்டம் பேரணி நடத்துவதற்கான இடம் நீதிமன்றம் இல்லை. நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி  முன்னாள் நீதிபதிகள் ஹரிப்பரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணி நடத்தியது குறித்து நீதிமன்ற பாதுகாப்பு குழு விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, ‘சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் போர்வையில் நக்சல்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களை நீதிமன்றத்திற்கு வரவிடாமல் தடுக்க முடியவில்லை. இது மட்டுமல்லாமல் நீதிமன்ற வளாகத்திற்குள் மது குடிப்பது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும்’ என்றார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி, ‘சென்னை உயர் நீதிமன்றம் முழுமைக்கும் சிஐஎஸ்.எப் பாதுகாப்பை நிரந்தரமாக  வழங்குவது தொடர்பாக நீதிமன்ற பாதுகாப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்ைகமார்ச் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் சில
  • தேர்தலில் தோல்வியடைந்தும் ஊருக்கே விருந்து வைத்த திமுக வேட்பாளர்



  • தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: சிறப்பு ரயில் 6ம் தேதி வரை இயக்கம்



  • பழத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் ஜல்லிக்கட்டு காளை பரிதாப பலி



  • 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு



  • குருவாயூர் கோயிலில் நடிகை திடீர் திருமணம்



  • திருநின்றவூரில் பாழடைந்த வீட்டில் கொல்லப்பட்டவர் ஆவடி வாலிபர்: நண்பர்களுக்கு போலீசார் வலைவீச்சு



  • திருநின்றவூர் பெரியார் நகரில் கழிவுநீரை அகற்றாவிடில் போராட்டம்...திருவள்ளூர் கலெக்டரிடம் பகுஜன் சமாஜ் மனு



  • திருவள்ளூர் பகுதிகளில் உருக்குலைந்துள்ள மின்கம்பங்களால் மக்கள் பீதி



  • அண்ணா நினைவு நாள்: திமுகவினர் மரியாதை



  • விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 13ம் தேதி ஆர்ப்பாட்டம்...தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]