இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

1/30/2020 3:48:57 PM
பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல் எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்

தஞ்சை: தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில்   தங்க முலாம் பூசப்பட்ட கலசம் இன்று  பொருத்தப்பட்டது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி 1ம் தேதி பிற்பகல் யாகசாலை பிரவேசம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 5ம் தேதி காலை வரை யாகசாலை பூஜைகள் நடக்கிறது. குடமுழுக்கையொட்டி கடந்த 27ம் தேதி கோயிலில் புதிய கொடிமரம் நடப்பட்டது. கோயில் கோபுரத்தில் உள்ள கலசம் கீழே இறக்கப்பட்டு தங்க முலாம் பூசி திருப்பணிகள் செய்யப்பட்டன. இன்று காலை 10 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கலசம் மீண்டும் கோபுரத்தில் பொருத்தப்பட்டது.

பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. குடமுழுக்கையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும், தஞ்சை நகரம் முழுவதும் இப்போதே பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு தஞ்சை பெரிய கோயிலுக்கு இன்று காலை 50 தீயணைப்பு வீரர்களுடன் வந்தார். அங்கு செய்யப்பட்டுள்ள தீத்தடுப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் மேலும் சில இடங்களில் தீத்தடுப்பு கருவிகள் பொருத்தவும் ஆலோசனைகள் வழங்கினார்.

சிறப்பு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் ஜெயராஜ் நவமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 4, 5ம் தேதிகளில் தஞ்சைக்கு 205 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் திருச்சி, நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை, மதுரை, அறந்தாங்கி, அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • தமிழகத்தில் ஊரடங்கு டிச.31வரை நீட்டிப்பு; கல்லூரிகள் டிசம்பர் 7ல் திறப்பு: 14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி



  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]