அஜீத் பட நடிகர் பாலா விவாகரத்து...பாடகி மனைவியுடன் கருத்து வேறுபாடு
12/10/2025 4:31:07 PM
எர்ணாகுளம்: வீரம் படத்தில் அஜீத் தம்பியாக நடித்த நடிகர் பாலா தனது பாடகி மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.தமிழில் அன்பு, காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா போன்ற படங் களில் ஹீரோவாக நடித்திருப்பவர் பாலா. அஜீத் நடித்த வீரம் படத்தில் அவருக்கு தம்பியாகவும் நடித்திருந்தார். தவிர பல்வேறு மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் மலையாள திரைப்பட பாடகி அம்ருதாவுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு அவந்திகா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலாவுக்கும், அம்ருதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 5 வருடமாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர். எர்ணாக்குளம் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு இருவர் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாலா, அம்ருதாவுக்கு சட்டப்படி விவாகரத்து வழங்கி நேற்று உத்தரவிட்டது.