இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?...நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி 20ல் மவுன விரதம்

12/10/2025 4:02:33 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, நாட்டில் குற்றம் உறுதி செய்யப்பட்ட 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்? என்றும், நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி, வரும் 20ம் தேதி மவுன விரதத்தை  டெல்லியில் தொடங்க உள்ளதாகவும் கடிதம் எழுதியுள்ளார்.  மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்ட எந்தவொரு குற்றவாளிக்கும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றவாளி ஒருவருக்கு கடைசியாக 2005ம் ஆண்டு ஆகஸ்டில் தூக்கு நிறைவேற்றப்பட்டது.

 தற்போது, 426 குற்றவாளிகள் மரணதண்டனைக்கு காத்திருக்கிறார்கள். நீதிமன்ற அமைப்பின் மூலம் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள், தடைகள் மற்றும் சிரமங்களை மக்கள் அநீதி என்று உணரத் தொடங்கியுள்ளனர். சமீபத்திய ஐதராபாத் சம்பவத்தில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெகுஜன ஆதரவு இருப்பதையே இது காட்டுகிறது. கொடூர குற்றவாளிகளை, என்கவுன்டர் போன்ற சம்பவங்களை நடத்தியே ஒழிக்க வேண்டும் என்று மக்கள்  இப்போது விரும்புகிறார்கள். பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது. நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், ஏழு ஆண்டுகளாக நிறைவேற்ற வில்லை.

நிர்பயா  வழக்கின் தாமதம் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அராஜகத்தை ஏற்படுத்தக்கூடும். கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு, நாட்டில் இதுபோன்ற வழக்கில் தூக்கு எதுவும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அன்னா ஹசாரே கூறுகையில், ‘‘கடந்த 2012ல் டெல்லியில்  நடந்த சம்பவத்திற்கு நிர்பயா குடும்பத்துக்கு நீதி கோரி, வருகிற 20ம் தேதி முதல் ராலேகன்  பகுதியில் மவுன விரதம் கடைப்பிடிக்க உள்ளேன். இதுபோன்ற  குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், நான் காலவரையின்றி உண்ணாவிரதம் இருப்பேன்” என்றார்.

மேலும் சில
  • மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’



  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி...அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்



  • பெண் டாக்டரை எரித்துக்கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு



  • ஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பில் 2 அதிகாரிகள் ‘மிஸ்சிங்’



  • உன்னாவ் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட்



  • கோவை உள்பட 21 மாவட்டங்களில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை



  • மும்பையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்



  • உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு



  • கர்நாடக இடைத்தேர்தலில் முன்னிலை எடியூரப்பா அரசு தப்பியது



  • காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா 73வது பிறந்த நாள்: மோடி உட்பட தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]