இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை

12/10/2025 4:01:25 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

சென்னை: தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. இதன்  காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு மே மாதத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். இருப்பினும் இந்த ஆண்டுக்கான இயல்பு மழை அளவை  இன்னும் எட்டவில்லை. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் தற்போது வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்  மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்துள்ளது.

இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாக இலங்கைக்கு தென் கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகரும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 2.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்றைய அதிகபட்ச வெயில் 91.4 டிகிரி பாரன்ஹீட் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பதிவானது.  அதற்கடுத்தபடியாக நாமக்கல், சேலத்தில் 89.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

 அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியின் ஒரு சில பகுதிகள், உள்மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன்  காணப்படும். ஒரு சில  பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சில
  • ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் முழங்க தி.மலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...இன்றுமாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்



  • நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ததில் ₹8 லட்சம் மோசடி...பிரபல துணிக்கடை அதிபரை ஏமாற்றிய லாரி டிரைவருக்கு போலீஸ் வலை



  • அஜீத் பட நடிகர் பாலா விவாகரத்து...பாடகி மனைவியுடன் கருத்து வேறுபாடு



  • கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து தி.மலைக்கு 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கம்



  • அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம்...100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்



  • கூடுவாஞ்சேரி பேரூராட்சி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்பு



  • ஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலால் களைகட்டிய கிராமங்கள்: ஜெராக்ஸ் கடையில் மக்கள் கூட்டம்



  • திருவள்ளூர் அருகே பரபரப்பு 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து...சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது



  • நண்பர்களாக இருப்பவர்கள் ‘லவ் யூ சொல்லி முத்தமா கொடுப்பார்கள்?’: நடிகை ஜெயஸ்ரீ கேள்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]