இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

வீரர்களின் போதை ஆய்வு அறிக்கையில் மோசடி 2022 உலக கால்பந்தில் ரஷ்யாவுக்கு 4 ஆண்டு தடை...‘வாடா’ நடவடிக்கையால் பெரும் பின்னடைவு

12/10/2025 3:41:18 PM
பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு : நடிகை பயல் கோஷ் டுவிட்டால் அதிரும் பாலிவுட் கொரோனா தடுப்பு குறித்து வரும் 23ம் தேதி 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: அதிக தொற்று பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்பு

லொசேன் நகர்: கோடை, குளிர்கால ஒலிம்பிக் மற்றும் 2022 கால்பந்து உலகக் கோப்பை போட்டி கட்டாரில் நடக்கிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில், ரஷ்ய நாட்டின் தேசிய அணி பங்கேற்க  முடியாது என்று, உலக ஊக்கமருந்து  எதிர்ப்பு நிறுவனம் (வாடா) நிர்வாக குழு அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து,  வாடா தலைவர் கிரேக் ரீடி, சுவிஸ் நகரமான லொசேன் நகரில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் கூறியதாவது:  போதைப்பொருள் பயன்படுத்தும் வீரர்களை அடையாளம் காண உதவக்கூடிய ஆய்வக தரவுகளில், ரஷ்ய அதிகாரிகள் போலி ஆதாரங்களை சமர்பித்துள்ளனர். நேர்மறை ஊக்கமருந்து சோதனைகளுடன் இணைக்கப்பட்ட கோப்புகளை  நீக்கிவிட்டனர். பல விளையாட்டுகளில் பாரம்பரியமாக ஒரு அதிகார மையமாக இருந்த ரஷ்யாவின் இந்த மோசடி, அந்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, ரஷ்ய தேசிய அணியானது கட்டாரில் 2022ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை கால்பந்தில் பங்கேற்க முடியாது. நடுநிலையாளர்களாக மட்டுமே பங்கேற்க முடியும். உலகக் கோப்பையில் நடுநிலையாளர்களாக போட்டியிடுவது  நடைமுறையில் எவ்வாறு செயல்படக்கூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த முடிவின் அளவை தெளிவுபடுத்த ‘வாடா’வுடன் கால்பந்தின் உலக குழுவான ஃபிஃபா தெரிவித்துள்ளது. இந்த தடையால், ரஷ்ய விளையாட்டு வீரர்கள்  மற்றும் வீராங்கனைகள் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது. நான்கு ஆண்டுகள் இந்த தடை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2018ம் ஆண்டு பியோங்சாங் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், ரஷ்ய அதிகாரிகள் உண்மையை மறைத்ததால், அது ‘வாடா’ குழுவால் கண்டறியப்பட்டது. தற்போதைய தடையால், ரஷ்ய  கால்பந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் சட்டமன்ற உறுப்பினரும் துணைப் பேச்சாளருமான இகோர் லெபடேவ் கூறுைகயில், ‘‘வாடா-வின் நடவடிக்கை ரஷ்ய  விளையாட்டுக்கு கடுமையான அடியாகும், இதற்கு ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து பதில் தேவை’’ என்றார்.

மேலும் சில
  • கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் இன்றிரவு ஐபிஎல் கோலாகல தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்



  • யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்: ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ்



  • பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா பாசிட்டிவ்



  • ஐசிசி உலக கோப்பை, ஐசிசி டி20, ஐசிசி ஆசிய கோப்பை தொடர் சாதனை மன்னன் தோனி ஓய்வு; சென்னையில் இருந்து அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி



  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]