இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

12/9/2025 2:34:17 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

புதுடெல்லி: உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டை பின்பற்றிய பிறகு தேர்தல் நடத்தக்கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு நாளை மறுநாள் அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கிய நிலையில் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவால், பழைய அறிவிப்பினை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.  வேட்பு மனு தாக்கல் செய்ய டிச. 16ம் தேதி கடைசி நாள் என்றும், வேட்பு மனு பரிசீலனை 17ம் தேதியும், மனுக்களை திரும்ப பெற 19ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜன. 2ம் தேதி எண்ணப்படும் என்றும், தேர்வாகும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு ஜன. 6ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியாகவில்லை என, திமுக உள்ளிட்ட கட்சிகள் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகின்றன.  இந்நிலையில், இன்று 27 மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் ெதாடங்கப்பட்ட நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 5 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதியதாக இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தற்போது அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அட்டவணையில் எஸ்சி-எஸ்டி மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றவில்லை. உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. 2011 வார்டு வரையறையை பின்பற்றாமல், புதியதாக வார்டு வரையறை செய்து தேர்தல் அறிவித்துள்ளனர்.

 இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். 7ம் தேதி அறிவித்த தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும். புதிய அட்டவணையை அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது.  இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, ‘புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை மறுநாள் (டிச. 11) விசாரிக்கப்படும்’ என்று அறிவித்தனர். எதிர்க்கட்சிகள் தரப்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவை போன்று, அதே கோாரிக்கையை வலியுறுத்தி வாக்காளர்கள் தரப்பில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]