இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா

12/8/2025 2:32:27 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று காலை மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின், 7ம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை முதலாவதாக விநாயகர் தேர், 2வதாக சுப்பிரமணியர் தேர், 3வதாக சுவாமி தேர் என அழைக்கப்படும் `மகா ரதம்’  மாடவீதியில் பவனி வந்தது. மகா ரதத்தின் மீது  பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். மாடவீதியில் வலம் வந்த மகாரதம் இரவு சுமார் 9.30 மணியளவில் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் தேர் புறப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் பவனி வந்தார். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். தேரோட்டத்தின் நிறைவாக இரவு சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வந்தது.

இந்நிலையில், தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று பகல் மரக்குதிரை வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் புறப்பட்டு பவனி வந்தனர். மாலை 4.30 மணியளவில் தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெறும். 6 மணியளவில் கோயில் கலையரங்கில் பரதநாட்டியம் நடக்கிறது.
இரவு உற்சவமாக மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனத்தில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர். தீபத்திருவிழாவின் 10ம் நாளான நாளை மறுநாள் அதிகாலை பரணி தீபமும், மாலை மகாதீப பெருவிழாவும் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை கோயிலில் ஏகன் அனேகன் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 5 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு பின்னர் ஒரே தீபமாக சேர்க்கப்படும். பின்னர் மாலை கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.

மகாதீபம் ஏற்றப்படும் தீபக்கொப்பரையும், நெய்யும், 1000 மீட்டர் துணியும் தயார் நிலையில் உள்ளது. மகாதீப கொப்பரை நாளை காலை மலைக்கு ெகாண்டு செல்லப்படும். மகா தீபத்தை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நேற்று காலை தொடங்கியது. இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் சுமார் 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.

மேலும் சில
  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



  • உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு



  • காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு ‘ரிசல்ட்’



  • கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு



  • சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி



  • இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை



  • 2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்



  • தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]