இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்... மாநில தேர்தல் ஆணையர் தகவல்

12/6/2025 2:38:57 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்ப பெறப்படுவதாகவும், புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சட்டரீதியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்தது.

இதையடுத்து, தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த திங்கள் கிழமை அறிவித்தது. அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,18,974 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறுகிறது. இதில், 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.

முதல் கட்டத்தில் 194 ஊராட்சி உள்பட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 2ம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி வேட்புமனு தாக்கல் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கோரி, மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு அவசர உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த தடையில்ைல என்று தெரிவித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை முடித்து நான்கு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை திரும்பப்பெறப்பட்டு விட்டதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பாணை இன்று வெளியிடப்படாது. உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பின்பு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். தேர்தல் அறிவிப்புகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து புதிதாக மீண்டும் அறிவிப்பாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது



  • திருக்குவளையில் கருணாநிதி சிலை மு.க.ஸ்டாலின் 7ம் தேதி திறக்கிறார்



  • மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல்



  • மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்



  • கடலூர் அருகே பயங்கரம்; மாஜி பஞ். தலைவரின் தம்பி படுகொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு



  • தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாத முதலாவது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; விதிகளை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு



  • தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது குவியும் புகார்கள்: ஏடிஎஸ்பி விசாரணை



  • பிளஸ் 1 பொது தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி



  • அண்ணா சிலைக்கு காவி துணி அணிவிப்பு: கன்னியாகுமரியில் பரபரப்பு



  • மத்திய அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]