இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு

12/5/2025 3:38:40 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

அவிநாசி: கோவை மாவட்டம் அவிநாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடியும் வரை தேர்தல் வருமா, வராதா என்ற நிலைதான் இருக்கின்றது.  இப்போதுகூட உச்சநீதிமன்றம் டிசம்பர் 13ம் தேதிக்குள் உள்ளாட்சி சட்ட நடைமுறைகளை உள்ளடக்கி தேர்தல் தேதியை  அறிவிக்க உத்தரவிட்டதால்தான் தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதிலும் கிராம ஊராட்சிகளுக்குத்தான்  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான மோசடிகள் செய்ய, தேர்தலைப் பிரித்துப் பிரித்து  நடத்துகிறார்கள். எப்படி இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலைச் சந்திப்போம்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் நீதி வழங்கப்படவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்துக்கு  ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. அதையும் முறையாக கொடுப்பதில்லை. கார்பரேட்டுகளுக்கு தவணை,  தவணையாக சலுகை வழங்கும் பாரதிய ஜனதா அரசு, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒழித்துக் கட்டவும் முடிவு செய்துள்ளனர். அதில் வேலை செய்யும் ஒப்பந்த  தொழிலாளர்களுக்கு 8 மாத சம்பளத்தை வழங்காமல் பாக்கி வைத்திருக்கின்றனர். ரூ.7 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள  பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள்.

சேலம் உருக்காலை, திருச்சி பெல் போன்ற  பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் விடுகிறார்கள். ராணுவ தளவாடத் தொழிற்சாலைகளை திருச்சி துப்பாக்கி  தொழிற்சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை ஆகியவற்றை ஏலம் போடுகிறார்கள். பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி முதலாளிகளுக்கு அதிக சலுகைகள் தருகிறார்கள். நெருக்கடி  அதிகரிக்கும்போது, மக்கள் நலத்திட்டங்களை மிகவும் குறைக்கிறார்கள். 70 ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கிய  கட்டமைப்பைச் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.வரும் 8ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.  இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மேலும் சில
  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



  • உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு



  • காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு ‘ரிசல்ட்’



  • கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு



  • சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி



  • இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை



  • 2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்



  • தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]