வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது
12/5/2025 3:21:29 PM
திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், கதிரியில் உள்ள சோமேஷ் நகரில் வசித்து வருபவர் மல்லேஷ் (40), மேஸ்திரி. இவரது மனைவி ஈஸ்வரி (36). 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மல்லேஷ் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். அவ்வாறு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு மது குடித்த மல்லேஷ் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்தாராம். தொடர்ந்து மதுபோதையில் மல்லேஷும், விஜயகுமாரும், வீட்டின் மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த ஈஸ்வரியின் கை, கால்களை கட்டிபோட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனராம். இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரி, அலறி கூச்சல்போட்டார்.
அப்போது ஆவேசமடைந்த மல்லேஷ், ஈஸ்வரியின் உடைகளை கழற்றி அவரின் உடலில் பல இடங்களில் சரமாரியாக அடித்து உதைத்தாராம். இதனால் மறுநாள் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி கதறிஅழுதார். இதுதொடர்பாக சித்தக்கூறு போலீஸ் நிலையத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து சென்று ஈஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஈஸ்வரியை மீட்டு, சிகிச்சைக்காக கதிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மல்லேஷ் மற்றும் விஜயகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.