இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு போட்டி: அசத்தி வரும் தடகள வீரர்கள்...இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது

12/5/2025 3:16:47 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

காட்மண்ட்: நேபாளத்தில் நடந்து வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய தடகள வீரர்கள், தொடர்ந்து  பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். இதுவரை மொத்தம் 32 தங்கம், 26 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என 71  பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. மேலும் பல போட்டிகளில் அரையிறுதி வாய்ப்புகளை இந்திய வீரர்கள்,  வீராங்கனைகள் உறுதி செய்துள்ள நிலையில், இந்தியாவின் கணக்கில் இன்னும் பதக்கங்கள் சேரும் என்று வீரர்கள்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நேபாள் தலைநகர் காட்மண்டுவில் தெற்காசிய விளையாட்டு போட்டிகள்-2019 கடந்த 1ம் தேதி துவங்கின. வரும் 10ம்  தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும்.

இதில் இந்திய தடகள வீரர்கள், வீராங்கனைகள் குறிப்பிடத்தக்க வகையில் முத்திரை பதித்து வருகின்றனர். கடந்த  செவ்வாய் கிழமை தடகள போட்டிகள் துவங்கின. முதல் நாளிலேயே இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 4  தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை அள்ளினர். மகளிர் 200 மீ ஓட்டத்தில் அர்ச்சனா 23.67 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். அதே போட்டியில் இந்திய  வீராங்கனை சந்திரா வெண்கலம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் சுரேஷ்குமார் தங்கம் வென்றார்.  மகளிர் வட்டு எறிதல் போட்டியில் நவ்ஜீத் கவுர் தில்லான் தங்கம் வென்றார். அதே பிரிவில் சுர்வி பிஸ்வாஸ் வெள்ளி  வென்றார்.

தொடர்ந்து தடகளத்தில் இந்திய வீரர்கள் பிரகாசிக்க, நேற்று மாலை நிலவரப்படி இந்தியா 32 தங்கம், 26 வெள்ளி  மற்றும் 13 வெண்கலம் என 71 பதக்கங்களை குவித்துள்ளது.
பாட்மின்டனில் இந்தியாவின் சிரில் வர்மா, ஆர்யமான் டண்டன் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நுழைந்து  பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த், இறுதிப்போட்டிக்கு தகுதி  பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கார்க்-அனுஷ்கோ ஜோடியும், மேக்னா-நெல்குர்தி ஜோடியும்  அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கலப்பு டரட்டையரில் துருவ் கபிலா-ஜக்கம்புடி ஜோடி அரையிறுதிக்கு  முன்னேறியுள்ளது.

டேபிள் டென்னிசில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி, தங்கம்  வென்றது. அவர்களுடன் மோதிய இந்திய வீரர்கள் சனில் ஷெட்டி-குரோவர் ஆகியோர் வெள்ளி வென்றனர். மகளிர்  இரட்டையர் பிரிவிலும் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்களைகளே மோதினர். இதில் மதுரிகா-ஜா தங்கம்  வென்றனர். சுகிர்தா-அகிகாவுக்கு வெள்ளி கிடைத்தது. கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணிக்கே தங்கம்  கிடைத்தது.

மேலும் சில
  • இந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் நாளை முதல் டி20 போட்டி



  • ‘பேபி பவுலர்’ பும்ரா....சொல்கிறார் ரசாக்



  • உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் மார்ச்சில் திறப்பு: உலக லெவன் - ஆசிய லெவன் போட்டி...ஐசிசி அனுமதிக்கு பிசிசிஐ காத்திருப்பு



  • டிவில்லியர்ஸ், கோஹ்லி அடித்த பந்தை காணவில்லை எங்களுக்கும் ஒரு உதவி பண்ணுங்க: ‘நாசா’விடம் பெங்களூரு அணி கோரிக்கை



  • பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் மெஹுலி கோஷ் உலக சாதனை...44 பதக்கத்துடன் 3ம் இடத்தில் இந்தியா



  • 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி: தென்னாப்பிரிக்காவில் ஜன. 17ம் தேதி தொடக்கம்...இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு



  • 15 ஆண்டாக நடந்த சிறுமிகள் பலாத்கார வழக்கு: மாஜி ஜூடோ சாம்பியனுக்கு சிறை...ஆஸ்திரியா நீதிமன்றம் அதிரடி



  • அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சிக்கு 6வது முறையாக ‘பாலன் டி ஓர்’ விருது: உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு



  • பிறப்பு சான்றிதழில் மோசடி: இளம் வீரருக்கு 2 ஆண்டு தடை...பிசிசிஐ அதிரடி நடவடிக்கை



  • ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் ஒரே ஆயுதம் இந்திய அணிதான்...இங்கிலாந்து மாஜி கேப்டன் ட்விட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]