இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை

12/5/2025 3:15:25 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

சாமியார்மடம்: குமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே கஞ்சிக்குழி தெற்குவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜய்யன் (60). ஜவுளி  வியாபாரி. இவரது மனைவி ராஜம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகன்களுக்கு  திருமணமாகி விட்டது. ஒரு மகனுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகி உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில்  கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு சொந்தமான தங்க நகைகளை வீட்டில் ஒரு இடத்தில் புதைத்து வைத்து இருந்தனர். இந்த நிலையில்  நேற்று அனைவரும் குடும்பத்துடன் குமாரகோயிலுக்கு சாமிகும்பிட சென்றனர். அப்போது ராஜய்யனின் மூத்த மருமகள்  பிரீத்தாவுக்கு ஒரு போன் வந்தது. உடனே அவசரம் அவரசமாக அவர் வீட்டுக்கு திரும்பினார். மற்ற அனைவரும்  கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பினர்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. உடனே குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் பிரீத்தா கழுத்தில்  துப்பட்டாவால் இறுக்கப்பட்டு, மிளகாய்பொடி தூவப்பட்ட நிலையில் சத்தம் போட்டு கொண்டிருந்தார். தொடர்ந்து  குடும்பத்தினர் அவரை மீட்டனர். குடும்பத்தினரிடம் மர்ம நபர்கள் தன்னை தாக்கி விட்டு நகைகளை எடுத்து சென்றுவிட்டதாக கூறினார். இந்த நிலையில்  குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது புதைத்து வைத்திருந்த 100 பவுன் நகைகளும் மர்நபர்களால்  தோண்டி எடுத்து திருடப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக ராஜய்யன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைப் பிடிக்க  தனிப்படை அமைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ராஜய்யனின் மூத்த மகன் சுரேஷ்பாபுவின் மனைவி  பிரீத்தா. இவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் வேண்டுதலுக்காக அனைவரும் குடும்பத்துடன் கோயிலுக்கு  சென்றுள்ளனர். கோயிலுக்கு செல்லும் வழியில் பிரீத்தாவுக்கு ஒரு போன் வந்துள்ளது. இதையடுத்து அவர் மட்டும் வீடு  திரும்பியுள்ளார். இந்த சமயத்தில்தான் கொள்ளை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக   பிரீத்தாவிடம் விசாரணை நடத்தினோம்.

அவர் கோயிலுக்கு செல்லும் போது தனக்கு உறவினரிடம் இருந்து போன்  வந்தது என்றார். சிறிது நேரம் கழித்து கணவரிடம் இருந்து போன் வந்தது என்று கூறினார். அவர் முன்னுக்கு பின்  முரணாக கூறிய தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஜய்யனிடம் விசாரித்தோம். அப்போது வீட்டில்  இருந்த நகைகள் தனது வீட்டில் உள்ளவர்கள் தவிர யாருக்கும் தெரியாது என்று கூறினார். இதனால் அவர் மீதும் சந்தேகம் வந்ததால் அவரிடமும் விசாரித்தோம். தொடர்ந்து ராஜய்யன், சுரேஷ்பாபு, பிரீத்தா,  அவரின் தந்தை, தாய் என்று 5 பேரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

மேலும் சில
  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட வீட்டில் ஒயின் தயாரித்தவர் கைது



  • ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த நடிகை கைது



  • போலீஸ்காரர் மகளை பலாத்கார முயற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]