இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்

12/5/2025 3:13:24 PM
திருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் சாமி சிலைகளை கொள்ளையடித்த இளம்பெண் உள்பட 3 பேரை  தனிப்படை போலீசார் கேரளாவில் மடக்கிபிடித்து கைது செய்தனர். விசாரணையில் இந்த சிலைகளை வெளிநாட்டுக்கு  கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.  குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றாக மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மகாதேவர் ஆலயம்  உள்ளது. சிவாலய ஓட்டத்தில் இது 2வது சிவாலயமாகும். மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு பல சிறப்பு  தன்மைகள் உள்ளன. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் இங்கு ஏராளமான  பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி இந்த கோயில் கதவு உடைக்கப்பட்டு கருவறையில் இருந்த சாமி சிலைகள்,  உண்டியலில் இருந்த காணிக்கை பணம், செம்பால் செய்யப்பட்ட நந்தி, வெள்ளி மற்றும் செம்பால் ஆன திருமுகங்கள்,  செம்பினால் ஆன திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. புராதனமான கோயிலில் கொள்ளை  நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள்  அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.  கோயிலுக்கு வந்து சென்ற பக்தர்களை கண்காணித்தனர்.

அப்போது கேரளாவில் இருந்து வந்து சென்ற ஒரு கும்பல் மீது  சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று அந்த கும்பலை ரகசியமாக  கண்காணித்தனர். அப்போது திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷானவாஸ் (35) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் பல திடுக்கிடும்  தகவல்களை தெரிவித்தார். ஷானவாஸ், அவரது நண்பர் உசேன் (36), இவரது கள்ளக்காதலி அமரவிளையை சேர்ந்த  இளம்பெண் எஸ்மிதா ஆகியோர் திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கொள்ளையடித்தது தெரியவந்தது. போலீசார் 3  பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: உசேனும், எஸ்மிதாவும் கணவன் மனைவி போல் பக்தர்கள்  வேடமணிந்து காரில் வந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களை நோட்டமிடுவர். மிக பழமையான கோயில்களில்  உள்ள புராதன பொருட்களுக்கு வெளிநாடுகளில் கோடிகணக்கில் மதிப்பு உள்ளது. இதனால் புராதன பொருட்கள் உள்ள  கோயில்களை தொடர்ந்து பல நாட்களாக நோட்டமிட்டுவர்.

பாதுகாப்பு குறைவான, கண்காணிப்பு கேமரா இல்லாத கோயில்கள் மற்றும் எளிதாக தப்பி செல்ல வசதி உள்ள  கோயிலை தேர்ந்தெடுத்து அங்கு தொடர்ந்து பல நாட்கள் பூஜை செய்வது போல் செல்வர். திக்குறிச்சி மகாதேவர்  கோயில் ஆற்றங்கரையில் பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்ததாலும், எளிதாக கேரளா தப்பி  சென்றுவிடலாம் என்பதாலும் இந்த கோயிலில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர்.  அங்கு முதல் முறை கொள்ளையடிக்க முயன்றபோது அவர்களுக்கு உடல் நடுக்கம் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனால் அன்று கொள்ளையடிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு திரும்பியுள்னர். பின்னர் 2வது முறையாக மீண்டும்  ஆகஸ்ட் 31ம் தேதி வந்து கொள்ளையடித்துள்ளனர்.

அவர்கள் காரில் வந்து பூட்டை உடைத்து விலை உயர்ந்த பொருட்களை பெயர்த்து எடுத்து காரில் வைத்துக் கொண்டு  திருவல்லா சென்றுள்ளனர். அங்குள்ள பாலத்தின் இருந்து மதிப்பு குறைவான பொருட்களை ஆற்றில் வீசியுள்ளனர்.  பின்னர் விலைமதிப்பு மிக்க சிலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இந்த சிலைகளை வெளிநாடுக்கு கடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். தற்போது சிலைகளை வெளிநாட்டுக்கு கொண்டு  செல்வதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதோடு உசேன் விபத்தில் சிக்கியுள்ளார். மேலும் எஸ்மிதாவுக்கும் உடல் நல  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலையை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் சில
  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து குத்திக் கொன்ற வாலிபருக்கு அடிஉதை...ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி



  • வைகை அணை 67 அடியை எட்டியது: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை



  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட வீட்டில் ஒயின் தயாரித்தவர் கைது



  • ஷூட்டிங்கில் சில்மிஷம் செய்த விவகாரத்தில் நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு பிளாக் மெயில் செய்த நடிகை கைது



  • போலீஸ்காரர் மகளை பலாத்கார முயற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]