இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை...தமிழருக்கு குவியும் வாழ்த்துக்கள்

12/4/2025 3:46:10 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை செயல்  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் பிறந்த ெபாறியாளர் சுந்தர் பிச்ைச, கோரக்பூர் ஐ.ஐ.டி.யில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்  எம்எஸ்  பட்டமும், பென்சில்வேனியாவில் வார்டன் கல்லூரியில்  எம்பிஏ பட்டமும் பெற்ற சுந்தர் பிச்சை, கடந்த 2004ம் ஆண்டு முதல்  கூகுள் நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார். தொடர்ந்து கூகுள்  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2015ம் ஆண்டு  நியமிக்கப்பட்டார். கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி பேஜ் என்பவர், அல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வந்தார்.

இந்நிலையில்  அப்பதவிக்கு சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக கூகுளின் நிறுவனர்களுக்கு சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி  தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் தானியங்கி கார், வாழ்வியல் அறிவியல் என பல்வேறு சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கிய நிலையில்,   அத்தொழில்கள் அனைத்தும் அல்ஃபாபெட் என்ற நிறுவனத்தின் ஒரே குடையின் கீழ் 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  அப்போது கூகுள்  நிறுவனத்தை மட்டும் நிர்வகித்து வந்த சுந்தர் பிச்சை, தற்போது அக்குழுமத்தின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்பையும் ஏற்க உள்ளார்.

 உலகின்  மிகப்பெரிய தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் தலைமைப் பதவியில் தமிழர் ஒருவர் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் கூகுள் நிறுவன சிஇஓ  பொறுப்புடன் கூடுதலாக அல்ஃபாபெட் நிறுவனத்தின்  சிஇஓ பொறுப்பையும் சுந்தர் பிச்சை கவனித்து கொள்வார் என்று தகவல்கள்  கூறுகின்றன.  தற்போது, அல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வாழ்த்து  தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில
  • பெய்ரூட்டில் குடோனில் சேமித்து வைத்திருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்து 78 பேர் உடல் சிதறி பலி: 3,700க்கும் மேற்பட்டோர் படுகாயம்; அவசரநிலை பிரகடனம்



  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]