இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கள்ளக்காதலனுடன்தான் செல்வேன் ஸ்டேஷனில் இளம்பெண் அடம்

10/10/2025 3:32:14 PM
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (32, பெயர் மாற்றம்). கொத்தனார். இவரது மனைவி செல்வி (27, பெயர் மாற்றம்). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் வீடு அருகே வசிப்பவர் சுரேஷ்குமார் (26 பெயர் மாற்றம்). கட்டிட வேலை செய்து வருகிறார். வேலைக்கு செல்லும் இடத்தில் அனிசுக்கும்-சுரேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி அனிஷின் வீட்டுக்கு சென்று வந்தார். இதனால் அனிஷின் மனைவி செல்வியுடன் சுரேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவன் வெளியே சென்ற பிறகு செல்வியும், சுரேஷ்குமாரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த கள்ளத் தொடர்பு அக்கம் பக்கத்தினருக்கும் தெரியவந்தது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு செல்வி தனது 2 குழந்தைகளுடன் திடீரென மாயமானார். அனிஷ் வேலை முடிந்து திரும்பியபோது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தார். எங்கும் இல்லை.

இதற்கிடையே அக்கம் பக்கம் விசாரித்த போது சுரேஷ்குமார் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. இந்த நிலையில் சுரேஷ்குமாரும் மாயமாகி இருப்பது அனிஷ்க்கு தெரியந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கடத்தி சென்று விட்டதார். ஆகவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கள்ளக்காதல் ஜோடி, ராஜாக்கமங்கலம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக வாழ்ந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று கள்ளக்காதல் ேஜாடியை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது செல்வி, தனக்கு அனிஷ் வேண்டாம். கள்ளக்காதலன் சுரேஷ்குமார் தான் வேண்டும். குழந்தைகளையும் தர மாட்டேன் என்று அடம் பிடித்தார். காவல் நிலையத்தில் தாலி கட்டிய கணவன் நிற்க, கள்ளக்காதலனுக்காக செல்வி கண்ணீர் விட்டு கதறி அழுதார். என்ன இருந்தாலும் குழந்தைகளுக்கு அனிஷ்தான் தந்தை. அவரால் தான் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும். கள்ளக்காதலன் மோகம் தீர்ந்ததும் குழந்தைகளை கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகளின் நலனுக்காக கணவருடன் சேர்ந்து வாழ்வது தான் சரியானாக இருக்கும் என்று போலீசார் செல்விக்கு அறிவுரை வழங்கினர். அதை செல்வி ஏற்றுக் கொண்டு கணவருடன் சென்றார்.  அதன் பிறகு சுரேஷ்குமாரை எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நேற்று மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • திருப்போரூர் அருகே பரபரப்பு: அடகு கடைக்காரரை துப்பாக்கியால் மிரட்டி நகைகள், பணம் கொள்ளையடிக்க முயற்சி



  • நாகர்கோவிலில் விடுமுறை தினத்தில் விளையாட்டு பயிற்சிக்காக பள்ளிக்கு மாணவியை வரவழைத்து சில்மிஷம்



  • காவல்நிலையம் எதிரே இளம்பெண்ணை குத்தி கொல்ல முயன்ற போலீஸ்காரர்



  • பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது



  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



  • வீட்டுக்கு குடிக்க கூட்டி வந்து மனைவியை கட்டிப்போட்டு நண்பருடன் பலாத்காரம்: காமக்கொடூர கணவன் கைது



  • வீட்டில் புதைத்து வைத்த 100 பவுன் கொள்ளை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை



  • குமரிமாவட்ட கோயிலில் கொள்ளை இளம்பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது...வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]