இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கேரளாவில் 6 பேரை கொன்ற பெண்: அதிகாரியின் குழந்தையையும் கொல்ல முயன்றார்

10/10/2025 3:15:26 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் 6 பேர் கொலை வழக்கில் கைதான ஜோளி தனக்கு போலி உயில் தயாரிக்க உதவிய பெண் தாசில்தாரின் மகளையும் கொல்ல முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கைதான ஜோளியை காவலில் எடுக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ராய்தாமஸ். இவரது மனைவி ஜோளி கடந்த 2002 முதல் 20016க்கு உள்பட்ட காலகட்டத்தில் கணவர், மாமனார், மாமியார் உள்பட 6 பேரை கொலை செய்தார். அதோடு கணவரின் குடும்ப சொத்தை தனது பெயருக்கு மாற்றினார். இந்த உயில் விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக ராய்தாமசின் தம்பி ரோஜோ, போலீஸ் மற்றும் வருவாய்துறையில் புகார் செய்தார். விசாரணையில், போலி உயில் தயாரித்து மோசடி செய்ததும், இதற்கு தாமரசேரி வருவாய்துறை அதிகாரிகள் உதவியதும் தெரியவந்தது.

குறிப்பாக அப்போது துணை தாசில்தாராக ஜெயஸ்ரீ தான் ஜோளிக்கு போலி உயில் தயாரிக்க பெரும் உறுதுணையாக இருந்துள்ளார். ஜோளியின் வீட்டின் அருகில் தான் ஜெயஸ்ரீ வசித்துள்ளார். இதனால் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். எனவே ஜெயஸ்ரீ குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. ஜெயக்கு 3 வயதில் ஒரு மகள் உண்டு. இந்த குழந்தை ஒன்றரை வயதாக இருந்த போது 2 முறை வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தை வாந்தி எடுத்த இரு முறையும் ஜெயஸ்ரீ வீட்டில் ஜோளி மட்டுமே இருந்துள்ளார். இரு முறையும் குழந்தை தீவிர சிகிச்சைக்கு பிறகே உயிர் பிழைத்து வந்தது.

ஜோளியின் கைதுக்கு பிறகு நடந்த விசாரணையில், பெண்கள், பெண் குழந்தைகளை தனக்கு பிடிக்காது என்று போலீசில் கூறியுள்ளார். இதனால் ஜெயஸ்ரீயின் குழந்தையையும் ஜோளிதான் விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே கைதான ஜோளி, அவருக்கு சயனைடு வாங்கி கொடுத்த உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜுகுமார் ஆகிய 3 பேரும் கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நாளை தாமரசேரி நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து ஜோளியை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் தீர்மானித்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

மேலும் சில
  • கள்ளக்காதலனுடன்தான் செல்வேன் ஸ்டேஷனில் இளம்பெண் அடம்



  • சகோதரர்கள் கொலை வழக்கு: தந்தை மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள்



  • திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: முக்கிய குற்றவாளி சுரேஷ் செங்கம் கோர்ட்டில் சரண்



  • நாமக்கல் அருகே திருவிழாவில் பேயை விரட்ட சாட்டையடி... அடி வாங்க பெண்கள் குவிந்தனர்



  • வேலையில் சேர்ந்த 20வது நாளில் பெண் தபால்காரர் தீக்குளித்து சாவு



  • சேலம் செவ்வாப்பேட்டையில் காருக்குள் காதல்ஜோடி உடல் மீட்பு



  • சொத்துக்காக கணவன் உள்பட 6 பேரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு; 5 பேரை கொல்ல முயற்சி?



  • சிகிச்சைக்கு வந்த மாணவி பலாத்காரம் ஊழியருக்கு சரமாரி அடி, உதை: வாணியம்பாடி அருகே அதிர்ச்சி



  • திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரியில் ரூ.2.68 லட்சம் கையாடல்: கணக்காளர் கைது



  • கொடுங்கையூரில் தடை செய்யப்பட்ட 1500 கிலோ குட்கா, ஹான்ஸ் பறிமுதல்: ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]