இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பிளஸ்2 மாணவி எரித்து கொலை தீ குளித்து வாலிபர் தற்கொலை

10/10/2025 3:11:33 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

திருவனந்தபுரம்: காதலை ஏற்க மறுத்த பிளஸ்2 மாணவியை இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற வாலிபர் தானும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் ஷாலன். இவரது மகள் தேவிகா (17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். எர்ணாகுளம் வடக்கு பரவூர் பகுதியை சேர்ந்தவர் மிதுன். பெயின்டிங் தொழிலாளி. இவர் மாணவி தேவிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

தேவிகா 8ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அவரை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து வந்துள்ளார்.  ஆனால் தேவிகா அவரை காதலிக்க மறுத்து வந்துள்ளார். இதனால் தேவிகா மீது மிதுன் கொலை வெறியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஷாலன் மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். இன்று அதிகாலை 2 மணியளவில் மிதுன் பெட்ரோல் கேனுடன் பைக்கில் தேவிகா வீட்டுக்கு சென்றார். வீட்டின் முன்பு நின்றுகொண்டு சிறிது பெட்ரோலை தனது உடலில் ஊற்றியுள்ளார்.

பின்னர் வீட்டின் கதவை பலமாக தட்டினார். அப்போது ஷாலன் கதவை திறந்தார். கதவு திறந்ததும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தேவிகா எங்கே என்று சத்தம் போட்டவாறு உள்ளே நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு தேவிகாவும் எழுந்து வந்து கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் வீட்டில் உள்ளவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணவதற்குள் தேவிகாவின் உடலில் மிதுன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவென எரிந்ததால் தேவிகா உடல் கருகியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரை காப்பாற்ற வீட்டில் உள்ளவர்கள் முயற்சித்தனர்.

அதன் பின்னரும் வெறி அடங்காமல் கத்திய மிதுன் வீட்டிற்கு வெளியே வந்து வீட்டின் முன்பு நின்று கொண்டு மீதம் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். அதற்குள் தேவிகா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மிதுனை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். தொடர்ந்து அவரை எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவரும் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காக்கநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு காதலை விவகாரத்தில் பள்ளி மாணவியை எரித்துக் கொலை செய்து விட்டு, காதலனும் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • தமிழகத்தில் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் வணிகவளாகம் கட்டுவதற்காக ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பு



  • தமிழகத்தில் முதன் முறை கைத்தறி போர்வை விற்பனையை அதிகரிக்க நடமாடும் அரசு பஸ்



  • கர்நாடக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் ஆரம்பம்



  • மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு தமிழக அரசுக்கு முதுகெலும்பு கிடையாது: பிரசாரத்தில் வைகோ பேச்சு



  • பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்: வாலிபர் காயம்; டிரைவருக்கு சரமாரி அடி



  • ஆன்லைனில் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் திடீர் போராட்டம்



  • 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு



  • உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கோவையில் சொகுசு பங்களா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]