இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு தமிழக அரசுக்கு முதுகெலும்பு கிடையாது: பிரசாரத்தில் வைகோ பேச்சு

10/10/2025 3:07:00 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. திமுகவில் புகழேந்தியும், அதிமுகவில் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து கெடார், விக்கிரவாண்டி பகுதிகளில் மதிமுக தலைவர் வைகோ நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்று தமிழகத்தில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாழாகிவிட்டது. தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல். இதனால் இங்கே விஸ்தரிக்கப்பட இருந்த கார் தொழிற்சாலை வெளிமாநிலமான குஜராத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.தமிழகத்தில் காவல்துறைக்கு, வாக்கி டாக்கி வாங்கியதிலும் ஊழல், பருப்பு வாங்கியதிலும் ஊழல் என ரூ.400 கோடி ஊழல், இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க ஊழல் அரசாங்கமாக உள்ளது.

முதல்வர் மீது ஊழல், துணை முதல்வர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. ரயில்வே துறையில் தமிழர்களுக்கு வேலை இல்லை. அண்டை மாநிலத்தவர்களுக்கு தான் வேலை. மத்திய அரசு துறையில் தமிழர்களுக்கு இனிமேல் வேலை இல்லை. மத்திய அரசு சமஸ்கிருதத்தில் பகவத்கீதையையும், இந்தியையும் கொண்டு வந்து திணிக்கின்றனர். இதையெல்லாம் எதிர்த்து மத்திய அரசை கேட்க தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. தமிழக அரசுக்கு, மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு முதுகெலும்பு கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

ஒரே நாளில் பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதியில் ஒரே நாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 12ம் தேதி மாலை 4 மணிக்கு காணையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கல்பட்டு, மல்லிகைப்பட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர்திருக்கை, வெங்கமூரிலும், 13ம் தேதி மாலை நல்லப்பாளையத்தில் தொடங்கி கடையனம், பனமலை, சங்கீதமங்கலம், கல்யாணம்பூண்டி, மேல்காரணை, கஞ்சனூர் கூட்டுரோடு, நேமூர், எசாலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 12ம் தேதி முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி, டி.புதுப்பாளையம், வி.சாத்தனூரில் பிரசாரம் செய்கிறார்.

புதிய தமிழகம் எதிர்ப்பு

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த புதிய தமிழகம் கட்சி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தங்களது கட்சி கொடியை பயன்படுத்த அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரகுநாதன் கூறுகையில், தற்போது எங்கள் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் உத்தரவுபடி இடைத்தேர்தலில் பணியாற்றவில்லை. அதிமுக தரப்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எங்கள் கட்சி கொடியை பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் அனுமதியில்லாம் கட்சி கொடியை பயன்படுத்தக்கூடாது என்றார்.

மேலும் சில
  • தமிழகத்தில் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் வணிகவளாகம் கட்டுவதற்காக ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பு



  • தமிழகத்தில் முதன் முறை கைத்தறி போர்வை விற்பனையை அதிகரிக்க நடமாடும் அரசு பஸ்



  • கர்நாடக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் ஆரம்பம்



  • பிளஸ்2 மாணவி எரித்து கொலை தீ குளித்து வாலிபர் தற்கொலை



  • பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்: வாலிபர் காயம்; டிரைவருக்கு சரமாரி அடி



  • ஆன்லைனில் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் திடீர் போராட்டம்



  • 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு



  • உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கோவையில் சொகுசு பங்களா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]