இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

10/10/2025 2:59:35 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை: போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரைக்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளராகவும், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் போக்குவரத்துறை முதன்மை செயலாளராகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவர் அசோக் டோங்ரே சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளராகவும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் கூடுதல் தலைமை செயலாளர் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே போன்று தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு, தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவன தலைவர் பொறுப்பையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்கள். திருவள்ளூர் மாவட்ட சப்கலெக்டர் ரத்னா, அரியலூர் மாவட்ட கலெக்டராகவும், அரியலூர் கலெக்டர் வினய், மதுரை மாவட்ட கலெக்டராகவும் (தற்போது மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகர் விடுப்பில் உள்ள நிலையில்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு பணியில் இருந்த சுப்ரியா சாகூ, தமிழ்நாடு சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு சிறுதேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் வினித், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மதுரை கலெக்டர் ராஜசேகர் பல்வேறு அரசியல் அழுத்தம் காரணமாக அரசிடம் முறைப்படி விடுப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கபடவில்லை. இதனால் அவர் விடுப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு நீண்ட விடுமுறையில் சென்றார். இந்நிலையில் அவருக்கு பதில் மதுரை கலெக்டராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இது ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • தமிழகத்தில் 18 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்



  • அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் வணிகவளாகம் கட்டுவதற்காக ஓடைக்கால்வாய் ஆக்கிரமிப்பு



  • தமிழகத்தில் முதன் முறை கைத்தறி போர்வை விற்பனையை அதிகரிக்க நடமாடும் அரசு பஸ்



  • கர்நாடக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் ஆரம்பம்



  • பிளஸ்2 மாணவி எரித்து கொலை தீ குளித்து வாலிபர் தற்கொலை



  • மத்திய அரசை எதிர்க்கும் அளவிற்கு தமிழக அரசுக்கு முதுகெலும்பு கிடையாது: பிரசாரத்தில் வைகோ பேச்சு



  • பம்மல் பிரதான சாலையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்: வாலிபர் காயம்; டிரைவருக்கு சரமாரி அடி



  • ஆன்லைனில் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் திடீர் போராட்டம்



  • உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கோவையில் சொகுசு பங்களா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]