இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

10/10/2025 2:38:17 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு காங்கிரஸ் பேரழிவை சந்திக்கும்: ஜோதிராதித்ய சிந்தியா கருத்தால் சலசலப்பு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஜி.பரமேஷ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.எல்.ஜாலப்பாவை தலைவராக கொண்டு இயங்கிவரும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். மத்தியில் பாஜ தலைமையில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைந்த பின் கர்நாடகாவில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், பரமேஷ்வர் நாயக், காங்கிரஸ் எம்எல்ஏகள் லட்சுமி ஹெப்பால்கர், ராஜண்ணா ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதில் கிடைத்த ஆவணங்களை ஆதாரமாக வைத்து ஐடி சோதனையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வழக்கு தொடர்ந்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள், டி.கே.சிவகுமாரை கைது செய்து, டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஆர்.எல்.ஜாலப்பாவை தலைவராக கொண்டு இயங்கிவரும் தேவராஜ் அரஸ் மருத்துவ கல்லூரி, ஆர்.எல். ஜாலப்பா மருத்துவமனை, ஆர்.எல்.ஜாலப்பா நர்சிங் கல்லூரி ஆகியவை கோலார் மாவட்டம், தமக்காவில் உள்ளது. இதில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஜாலப்பாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் ஜாலப்பாவின் மகனும் முன்னாள் எம்எல்ஏவுமான நாகேந்திராவுக்கு சொந்தமான வீடு பெங்களூரு ஊரக மாவட்டம், தொட்டபள்ளபுரா தாலுகா, சோமேஷ்வரநகரில் உள்ளது. அந்த வீட்டிலும் 5 ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் முன்னாள் துணைமுதல்வர் டாக்டர் ஜி.பரமேஷ்வருக்கு சொந்தமான சித்தார்த்தா கல்வி குழுமம் துமகூரு மாவட்டத்தில் இயங்கி வருகிறது. அதன் கீழ் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூ, முதல்நிலை கல்லூரி, டிகிரி கல்லூரி உள்பட 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளது. இன்று காலை 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே சமயத்தில் கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள பரமேஷ்வர் வீடு, துமகூரு மாவட்டம், கொரட்டிகெரேவில் உள்ள வீடு, அலுவலகம், அவரது சகோதருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். பரமேஷ்வரின் உறவினர்கள், கல்வி குழுமத்தில் இயக்குனர்களாக உள்ளவர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

பெங்களூரு ஊரக மாவட்டம், நெலமங்கல டவுன் முனிசிபாலிட்டியின் சுபாஷ்நகர் வார்டு மஜத கவுன்சிலராக இருக்கும் சிவகுமார் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அவருக்கு சொந்தமான வீடு, தொழிற்சாலை, அலுவலங்கள், உறவினர்கள் வீடுகளில் காலை முதல் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்தள்ளதாக வந்து புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக வருமான வரித்துறை விளக்கம் கொடுக்கிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர்களை டார்கெட்டாக வைத்து சோதனை நடத்தி வருவதாக முன்னாள் முதல்வரும், சட்டபேரவை எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஐடி அதிகாரிகள் நடத்திவரும் சோதனை தொடர்பாக இன்று தொடங்கும் பேரவை கூட்டத்தில் கேள்வி எழுப்ப காங்கிரஸ் மற்றும் மஜத முடிவு செய்துள்ளது.

மேலும் சில
  • காங்கிரஸ் பேரழிவை சந்திக்கும்: ஜோதிராதித்ய சிந்தியா கருத்தால் சலசலப்பு



  • அரியானா பாஜ கட்சி தேர்தல் பிரசாரம் சர்ச்சையில் சிக்கிய ‘டிக்டாக்’ சோனாலி



  • ஜூவன்ஜோ துறைமுகம் முதல் தஞ்சை வரை: சோழருக்கும், சீனருக்கும் இடையில் பலமான உறவு



  • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்



  • திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி



  • 4 நாட்களாக போராட்டம் நடத்திய 48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி



  • உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் இன்று யானைகள் அணிவகுக்கும் பிரமாண்ட ஊர்வலம்



  • ஆள்மாறாட்டத்தை தடுக்க கைரேகை, கருவிழி சோதனை நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை மத்திய அரசுக்கு கடிதம்



  • திருப்பதி பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி ; மாலை தங்கத்தேரோட்டம்



  • ‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருட்டு மத்திய பிரதேசத்தில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]