இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அரியானா பாஜ கட்சி தேர்தல் பிரசாரம் சர்ச்சையில் சிக்கிய ‘டிக்டாக்’ சோனாலி

10/9/2025 3:01:57 PM
பிரதமர் மோடி-சீன அதிபர் நாளை சந்திப்பு: மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

ஆதம்பூர்: அரியானாவில் பாஜ சார்பில் போட்டியிடும் டிக்டாக் பிரபலமான நடிகை சோனாலி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியே இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அரியானா மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜ சார்பில் ஆதம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் டிக்டாக் மூலம் பிரபலமான நடிகை சோனாலி போகாத் போட்டியிடுகிறார். அவர், தற்போது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், பால்சமந்த் கிராமத்தில் பிரசாரம் செய்த சோனாலி, அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறி மீண்டும் மக்களை பதில் கோஷம் எழுப்பச் சொன்னார். ஆனால், அங்கு கூடியிருந்த பலரும் மீண்டும் பதில் கோஷம் எழுப்பாமல் அமைதியாக இருந்துள்ளனர்.

அதனால் கோபமடைந்த சோனாலி, ‘‘நீங்கள் எல்லாரும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா? நீங்கள் இந்தியர்கள் என்றால் பாரத் மாதா கீ ஜே என்று சொல்லுங்கள். நாட்டுக்காக ஜே என கூற முடியாத உங்களைப் போன்ற இந்தியர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். இவ்வாறு பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல முடியாதவர்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை’’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சோனாலி பேசிய வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது பால்சமந்த் தொகுதியில் 3 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் குல்தீப் பிஸ்ஸோனாய்க்கு எதிராக சோனாலி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கர்நாடக முன்னாள் துணைமுதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை



  • காங்கிரஸ் பேரழிவை சந்திக்கும்: ஜோதிராதித்ய சிந்தியா கருத்தால் சலசலப்பு



  • ஜூவன்ஜோ துறைமுகம் முதல் தஞ்சை வரை: சோழருக்கும், சீனருக்கும் இடையில் பலமான உறவு



  • சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்



  • திருப்பதியில் பிரம்மோற்சவம் நிறைவு: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி



  • 4 நாட்களாக போராட்டம் நடத்திய 48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடி



  • உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் இன்று யானைகள் அணிவகுக்கும் பிரமாண்ட ஊர்வலம்



  • ஆள்மாறாட்டத்தை தடுக்க கைரேகை, கருவிழி சோதனை நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்: தேசிய தேர்வு முகமை மத்திய அரசுக்கு கடிதம்



  • திருப்பதி பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி ; மாலை தங்கத்தேரோட்டம்



  • ‘பாபு பவன்’ அருங்காட்சியகத்தில் இருந்த காந்தியின் அஸ்தி திருட்டு மத்திய பிரதேசத்தில் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]