இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பொள்ளாச்சியில் தொரட்டி பட நடிகை கண்டுபிடிப்பு: கடத்தவில்லையென வாக்குமூலம்

7/31/2019 3:33:47 PM
சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

பொள்ளாச்சி:  தொரட்டி படத்தின் நாயகியும், பொள்ளாச்சியை சேர்ந்த நடிகையுமான மதிசத்தியகலாவை, அவரது குடும்பத்தினர் கடத்தி அடைத்து வைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஆட்கொணர்வு மனு கொடுத்துள்ளார். அது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாரிடம் நடிகை, தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.தொரட்டி என்ற தமிழ் படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஷமன்மித்ரு என்பவர் கடந்த 25ம் தேதி மகாலிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தபால் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ‘’தொரட்டி படத்தில் கதாநாயகியாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பாலாஜி நகரை சேர்ந்த சேர்ந்த மதிசத்தியகலா நடித்தார். அவருக்கு விருப்பம் இல்லாத திருமணத்திற்கு வற்புறுத்தி, அவரது பெற்றோர் தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் கடந்த 22ம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மதிசத்தியகலா கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, மதிசத்தியகலாவை அவரது பெற்றோர் தடுத்து நிறுத்தி, விருப்பத்திற்கு மாறாக வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்துவது தெரிய வந்தது. எனவே இந்த புகார் மனுவை ஏற்று கொண்டு, மதிசத்தியகலாவை அவரது குடும்பத்தினரின் சட்ட விரோத பிடியில் இருந்து மீட்க  வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் சென்னை உயர் நிதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘’மதி சத்தியகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இதையடுத்து போலீசார் மகாலிங்கபுரம் பாலாஜிநகரில் உள்ள நடிகை மதிசத்தியகலா வீட்டுக்கு சென்றனர். அங்கு மதிசத்தியகலா இருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். நடிகை மதிசத்தியகலாவும் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் அளித்தார்.
இது பற்றி போலீசார் கூறியதாவது:என்னை யாரும் தனிமையில் அடைத்து வைக்கவில்லை, கடத்தவும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவலாகும். பட தயாரிப்பாளருக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு செல்லவில்லை. இது சம்பந்தமாக விரைவில் முழு விளக்கம் அளிப்பேன், என்று மதிசத்தியகலா எங்களிடம் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இந்த மனு மீதான விசாரணை வரும் 5ம் தேதி நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.

மேலும் சில
  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



  • சென்னையில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்



  • செம்பரம்பாக்கம் ஏரியில் இரவு நேரத்தில் 9 ஆயிரம் கன அடி திறப்பு தண்ணீர் திறப்பால்: அடையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீர்



  • கல்பாக்கத்தில் கரையை கடந்தது நிவர்; கிராமங்கள் துண்டிப்பு: 20 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]