ஏழுமலையான் கோயிலில் ரூ4.19 கோடி காணிக்கை
6/27/2019 3:57:58 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 55 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 19 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 16 மணி நேரத்துக்கு பின் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் ரூ4.19 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. இதன்படி ஜூன் மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் நிரந்த உண்டியல்களில் ரூ.1 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரத்து 255 ரூபாயும், மேலக்கோபுர திருப்பணி உண்டியல், கோசாலை உண்டியல், யானை பராமரிப்பு உண்டியல், அன்னதான உண்டியல் ஆகியவற்றில் ரூ.10 லட்சம் காணிக்கை கிடைத்தது. மொத்தம் ரூ. 1 கோடியே 32 லட்சம் கிடைத்தது. மேலும் 1610 கிராம் தங்கம், 11,480 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 242ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
பழநி
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரொக்கமாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 47 ஆயிரத்து 840 கிடைத்தது. தங்கம் 491 கிராம், வெள்ளி 16,990 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 404 ஆகியவை கிடைத்தன.