இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

எண்ணூரில் 3 பேருக்கு சரமாரி வெட்டு: 2 ரவுடிகளுக்கு வலை

6/26/2019 4:47:53 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

திருவொற்றியூர்: சென்னை எண்ணூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டியன் (32). பிரபல ரவுடி. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருவொற்றியூர், சின்ன மேட்டுபாளையத்தை சேர்ந்த யாதவ சங்க தலைவர் பாண்டியமணி, மாட்டு மந்தை தெருவைச் சேர்ந்த கேட் சுப்பிரமணி ஆகியோரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.இதற்கிடையே, பிரபல ரவுடி பாண்டியனை கடந்த 21-ம் தேதி கேட் சுப்பிரமணியனின் உறவினரான திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கங்காதரன், தனது கூட்டாளிகளான மோகன், மோகன்ராஜ், அருண்ராஜ், பிரபாகரன், சரண் ஆகியோருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொன்றார். இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கங்காதரனின் சகோதரரான முருகன் (24) என்பவர் நேற்றிரவு எர்ணாவூர், சுனாமி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு தனது நண்பர்களுடன் நடந்து சென்றார். அப்போது கொலை செய்யப்பட்ட பாண்டியனின் மைத்துனரான தமிழ் (27) மற்றும் அவரது கூட்டாளி ஆகாஷ் (25) ஆகியோர் வழிமறித்தனர்.

பின்னர், எனது மாமா பாண்டியனை கொலை செய்த உன்னை உயிரோடு விடமாட்டேன் எனக் கூறி, முருகன் மற்றும் அவரது நண்பர்களான வினோத் (30), ஹரிகரன் (28) ஆகியோரை தமிழ் மற்றும் ஆகாஷ் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். வெட்டு காயங்களுடன் 3 பேரும் தப்பி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு போலீசார் வருவதை பார்த்ததும் தமிழ், ஆகாஷ் ஆகிய இருவரும் தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் போலீசார் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய தமிழ், ஆகாஷ் ஆகிய இருவரையும் வலைவீசி ேதடி வருகின்றனர். எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் அடுத்தடுத்து கொலை, கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர்.

மேலும் சில
  • நெருக்கமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டியதால் வாலிபரை தீர்த்து கட்டினேன்... கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்



  • சிறுமியிடம் அத்துமீறிய ரவுடி கைது



  • பைக்கில் சென்ற ஒப்பந்ததாரருக்கு சரமாரி வெட்டு...2 பேர் கைது



  • திருவனந்தபுரம் சிறையில் இருந்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்



  • திருமணம் செய்துகொள்வதாக கூறி பேஸ்புக் தோழி பலாத்காரம்: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு



  • பரங்கிமலையில் வேனில் 180 கிலோ கஞ்சா பறிமுதல்



  • இரிடியம் தருவதாக பல லட்சம் மோசடி கும்பல் தலைவனை பிடிக்க சென்னை பெங்களூருக்கு தனிப்படை விரைவு



  • புதுச்சேரி பகுதியில் பிரபல கம்பெனி பெயரில் போலி செல்போன் உதிரிபாகம் விற்பனை...வியாபாரி கைது



  • விவகாரத்து பெற்ற மனைவியுடன் வாழ்ந்துவந்த மகனை கடத்திய தந்தை கைது



  • ஆதீனத்துக்கு கொலை மிரட்டல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]