இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

இரிடியம் தருவதாக பல லட்சம் மோசடி கும்பல் தலைவனை பிடிக்க சென்னை பெங்களூருக்கு தனிப்படை விரைவு

6/26/2019 4:38:42 PM
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியநிலையில் எம்எல்ஏக்களுடன் திமுக, அதிமுக அவசர ஆலோசனை காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் விழா... கோயில் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்தார்

சேலம்: சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் தலைவனை பிடிக்க, சென்னை, பெங்களூரில் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். சேலம் அம்மாப்பேட்டை என்ஜிஜிஓ காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது நண்பர் ஸ்டாலின். இவர் மூலம் சென்னையை சேர்ந்த மதன் என்பவர் பிரவீன்குமாருக்கு பழக்கமானார். அப்போது தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், அதனை ₹250 கோடிக்கு விற்பனை ெசய்யலாம் எனவும் மதன் தரப்பினர் கூறியுள்ளனர். இதனையடுத்து, முதல் தவணையாக ₹25 லட்சமும், அதன்பின்னர் ₹30 லட்சமும் என மொத்தம் ₹55 லட்சத்தை பிரவீன்குமார், மதன் தரப்பினரிடம் கொடுத்துள்ளார். இதனிடையே இரிடியம் உள்ள பெட்டியை திறக்க, பிரத்யேகமான நவீன உடை வேண்டுமென தெரிவித்த மதன், இதற்காக மேலும் பல லட்சம் பணம் வேண்டுமென கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பிரவீன்குமார், சேலம் மாநகர போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில், மதன் தலைமையில் ஆந்திரா மற்றும் சென்னையை சேர்ந்த 6 பேர் அடங்கிய கும்பல், இரிடியம் இருப்பதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மோசடி கும்பலில் இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அங்கம் தாதாஜி, சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சரவணன், சென்னை ராயபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் நெற்குன்றத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கும்பல் தலைவனான மதன் மற்றும் அவனது கூட்டாளி ராம்பிரசாத் தலைமறைவாகினர். கும்பல் தலைவன் மதனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூராகும். ராம்பிரசாத் சேலத்தை சேர்ந்தவர். தற்போது மதன் சென்னையிலும், ராம்பிரசாத் பெங்களூரிலும் பதுங்கி யிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை, பெங்களூருக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

மேலும் சில
  • நெருக்கமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டியதால் வாலிபரை தீர்த்து கட்டினேன்... கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்



  • சிறுமியிடம் அத்துமீறிய ரவுடி கைது



  • பைக்கில் சென்ற ஒப்பந்ததாரருக்கு சரமாரி வெட்டு...2 பேர் கைது



  • எண்ணூரில் 3 பேருக்கு சரமாரி வெட்டு: 2 ரவுடிகளுக்கு வலை



  • திருவனந்தபுரம் சிறையில் இருந்து 2 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்



  • திருமணம் செய்துகொள்வதாக கூறி பேஸ்புக் தோழி பலாத்காரம்: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு



  • பரங்கிமலையில் வேனில் 180 கிலோ கஞ்சா பறிமுதல்



  • புதுச்சேரி பகுதியில் பிரபல கம்பெனி பெயரில் போலி செல்போன் உதிரிபாகம் விற்பனை...வியாபாரி கைது



  • விவகாரத்து பெற்ற மனைவியுடன் வாழ்ந்துவந்த மகனை கடத்திய தந்தை கைது



  • ஆதீனத்துக்கு கொலை மிரட்டல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]