வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாராவுக்கு திடீர் நெஞ்சுவலி...மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
6/26/2019 3:52:57 PM
மும்பை: கடந்த 1990 முதல் 2007ம் ஆண்டு வரை வெஸ்ட் இண்்டீஸ் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய பிரையன் லாரா, அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்தவர். டெஸ்ட் போட்டியில் தனியாளாக நானூறு ரன்கள் குவித்து சாதனை படைத்தவர். 131 டெஸ்ட் மற்றும் 299 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியின் நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் நிலையில் தனது பணி தொடர்பாக மும்பையில் அவர் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று லாராவுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதை எடுத்து உடனடியாக அவரை குளோபல் மருத்துவமனைக்கு உடன் இருந்த அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு பிரையன் லாராவுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் பூரணமாக குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.