இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

69 சதவீத இடஒதுக்கீடு குறித்து முழு விளக்கம் அளிக்க தயார் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

2/22/2019 2:47:56 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

புதுடெல்லி : தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு, அதனை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பயன்பாடு ஆகியவை தொடர்பான அனைத்து விளக்கங்களையும் அளிக்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ‘தமிழக மருத்துவ கலந்தாய்வின் போது 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் ஓசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால் அதனை  50 சதவீதமாக குறைக்க வேண்டும்’ என சென்னையை சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை காரணம் காட்டி மருத்துவ சீட்டில் கூடுதல் இடம் கேட்க முடியாது. மேலும் இந்த வழக்கை பொறுத்தமட்டில் தனிப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீதத்திற்கு எதிராக மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் அதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது. மேலும் அதற்கான முகாந்திரமும் மனுவில் கிடையாது என தெரிவித்து தள்ளுபடி செய்தது. இருப்பினும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மைனர் காயத்ரியின் பிரதான வழக்கை விரைவில் விசாரிப்பதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எந்த தடையும் இல்லை என்பது மீண்டும் உறுதியானது.

இந்த நிலையில் தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நாடு முழுவதும் 50 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் தனித்துவமாக 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பது எப்படி?’’ என கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, மற்றும் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா ஆகியோர் வாதத்தில்,”தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டு வருவது குறித்த அனைத்து விளக்கங்களையும் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வழங்கவும், தெரிவிக்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்தனர். ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவபாலமுருகன் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதிகள்,”தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வெவ்வேறு தேதிகளில் ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தக் கூடாது. இதுவே இந்த விவகாரத்தில் கடைசியாக இருக்க வேண்டும். விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றை தினம் இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என நேற்று உத்தரவிட்டனர்.

மேலும் சில
  • அமெரிக்காவை மிஞ்சும் இந்திய தேர்தல் செலவுகள்: மக்களவை தேர்தலுக்கு ரூ.73,600 கோடி?...அமெரிக்க நிபுணர் மிலன் வைஷ்ணவ் தகவல்



  • கோட் சூட் அணிந்தவர்களுக்கே தள்ளுபடி ஏழை விவசாய கடன்களை கண்டுகொள்ளாதவர் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’



  • விவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்



  • காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை



  • காங். தொண்டர்கள் கொலை ஏன்? சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்



  • பெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்



  • எரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்



  • மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்



  • கர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்?: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]