இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மீஞ்சூரில் வாலிபர் படுகொலையில் 5 பேரை கைது செய்து விசாரணை: குடிபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம்

2/21/2019 3:40:30 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

பொன்னேரி: மீஞ்சூரில் வாலிபரை கொலை செய்த வழக்கில் ஐந்துபேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூர், அண்ணா தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். இவரின் மகன் லட்சுமணன் (25). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த 10ம் தேதி மீஞ்சூரில் நடந்த நண்பர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 9ம் தேதி இரவு லட்சுமணன் சென்றார். இதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இதுபற்றி கடந்த 13ம் தேதி மீஞ்சூர் போலீசில் லட்சுமணனின் தந்தை புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது திருமண மண்டபத்தின் பின்புறமுள்ள கிணற்றில் லட்சுமணன் தலையில் பலத்த காயத்துடன் இறந்துகிடந்தார். சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பொன்னி உத்தரவின்பேரில், பொன்னேரி உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில், மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர்.இந்த நிலையில், சென்னை ஒரகடம் பகுதியில் லட்சுமணன் பைக் அனாதையாக நின்றிருந்தது. அந்த பைக்கை ஓட்டிய வாலிபர் கொடுத்த தகவல் அடிப்படையில், மீஞ்சூர், ஏரிக்கரை தெருவை சேர்ந்த அஜித் (25), மணிகண்டன் (25), இன்பராஜ் (21), சாமுவேல் (16), விஜய் (17) ஆகிய 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘’திருமண மண்டபத்தில் லட்சுமணன் மது அருந்தியபோது அவரது பாக்கெட்டில் இருந்த ₹5 ஆயிரம்,  செல்போனை பறித்தோம்.  அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறில் லட்சுமணனை பீர்பாட்டிலால் அடித்து கொன்றோம். சடலத்தை மண்டபத்தின் பின்புறமுள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்றோம்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதையடுத்து 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அஜித், மணிகண்டன், இன்பரசு ஆகிய 3 பேரை சிறையிலும் சாமுவேல், விஜய் ஆகிய இருவரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர்.

மேலும் சில
  • கூடுவாஞ்சேரியில் ஆசிரியையிடம் 7 பவுன் வழிப்பறி



  • வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது



  • க.காதலியை அபகரித்ததால் வாலிபர் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து விவசாயி கொடூர கொலை



  • 5 நாள் கஸ்டடி கொடுத்து கோர்ட் உத்தரவு: பாமக பிரமுகர் கொலையில் கைதான 3 பேரிடம் போலீஸ் மீண்டும் விசாரணை



  • விஷம் குடித்த காதலி சாவு: சித்தப்பா முறை காதலனுக்கு தீவிர சிகிச்சை



  • கொடைக்கானல் காவல்நிலைய வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜர்



  • திருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன 200 பவுன் நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்



  • போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு: சென்னையை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது



  • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி உட்பட 5 பேரிடம் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]