இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

அணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலையில் யுவராஜ் சிங்கின் ‘ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ்’ வீடியோ வைரல்

2/20/2019 3:46:20 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

மும்பை: இந்திய அணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலையில், யுவராஜ் சிங்கின் ‘ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ்’ வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அவர் ஐபிஎல் போட்டிக்கு தயாராவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகர் விருதை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் நாயகன் யுவராஜ் சிங்கை யாரும் மறக்க முடியாது. புற்றுநோயில் இருந்து போராடி மீண்டு வந்து, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால், 2011ம் ஆண்டுக்கு முந்தைய தனது அபாரமான விளையாட்டை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. இருந்தும் ஐபிஎல் போட்டிகளில் 2015ம் ஆண்டு வரை சிறப்பாக விளையாடினாலும், பெரிய அளவில் களத்தில் சோபிக்கவில்லை. அவ்வப்போது இந்திய அணியில் சேர்ப்பதும், நீக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்த நிலையில், தற்போது எந்த வாய்ப்பும் அவருக்கு கொடுக்கப்படாமல் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுவிட்டார்.

இந்நிலையில் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கூட, அவரை எந்த அணியும் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. கடைசி சுற்றில் தான் மும்பை அணி யுவராஜை தேர்வு செய்தது. அதுவும், அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கே அவரை வாங்கியது. இதுகுறித்து, யுவராஜ் சிங் கூறுைகயில், “கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. நான் கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் போது, என்னுடைய சிறப்பான நிலையை வெளிப்படுத்த வேண்டும். நான் வருத்தத்துடன் வெளியேற விரும்பவில்லை” என்றார்.
இதற்கிடையே வருகிற ஐபிஎல் தொடருக்கு அவர் தயாராகி வரும் நிலையில், மாலத்தீவில் நட்பு ரீதியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். அங்கு பேட்டிங் செய்த யுவராஜ் சிங், ‘ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ்’ அடித்த வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. ஏற்கனவே நட்சத்திர வீரர்களான தோனி, கோலி, ரோஹித் போன்றோர் சமூக தளங்களை ஆக்கிரமித்து, அவர்களுக்கான ஹெஷ்டேக்குகளுக்கு மத்தியில், யுவராஜ் சிங் போன்றோரின் ஹேஷ்டேக்குகள் தற்போது வைரலாகி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்றைய நிலையில், யுவராஜ் சிங் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருவது, ‘யுவ’ என்று அன்போடு அழைக்கப்படும் அவரது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • 2 ஆண்டுகளுக்கு பிறகு மாட்ரிட் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர்



  • மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராய், ரூட் அதிரடியில் இங்கிலாந்து மிரட்டல் வெற்றி



  • பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்: ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தகவல்



  • உலக கோப்பையை வென்ற கேப்டன் ஓய்வு அறிவிப்பு ‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன்’: மகிழ்ச்சியுடன் விடைபெறுவதாக அனுப் குமார் அறிவிப்பு



  • ஐபிஎல் தொடர் மார்ச் 23ல் சென்னையில் துவக்கம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணை: முதல் போட்டியில் தோனி - கோலி அணிகள் மோதல்



  • பெர்னாண்டோ, ரஜிதா அபார பந்துவீச்சு 235 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா



  • யு-23 தேசிய அணியில் வீரர்கள் தேர்வு விவகாரம்... ஹாக்கி மட்டையால் அமித் பண்டாரிக்கு அடி: ரவுடி கும்பல் தாக்குதலால் டெல்லியில் பரபரப்பு



  • ஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி எதிரொலி ‘எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை’: டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சவால்



  • புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சிக்கு 4வது வெற்றி: சென்னை அணி 3ல் 2 தோல்வி



  • தமிழக வீரர் விஜய் சங்கர், ரிஷப் பன்ட், ரஹானேவுக்கு வாய்ப்பு தோனிக்கு உலககோப்பை கடைசி போட்டியா?: இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவர் தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]