இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்

2/20/2019 3:33:07 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை திடலில் இன்று காலை தொடங்கியது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைத்தார். ஆசிய நாடுகளில் சிங்கப்பூர், அபுதாபி மற்றும் இந்தியாவில் பெங்களூருவில்  நடத்தப்படுகிறது. மாநகரின் எலங்காவில் உள்ள விமான பயிற்சி படைக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 75 ஆயிரம் சதுர அடியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை விமான கண்காட்சி நடக்கிறது. இவ்வாண்டு நடைபெறுவது 12வது சர்வதேச விமான கண்காட்சியாகும். இந்த கண்காட்சி இன்று தொடங்கி 24ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. காலை 9.10 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு, மத்திய இணையமைச்சர் சுபாஷ் பாப்ரே மற்றும் அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானமான சுகோய், சாரங், சூரிய கிரண், ரபேல், ஏஇடப்ளிவ் அண்ட் சி, யகோட் லான்ஸ், அட்வான்ஸ்டு இலகுரக ஹெலிகாப்டர், தேஜஸ், நேஷனல் ஏரோனாடிக்கல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள சாரஸ் பிடி1 என், எம்ஐ 17, சுகோய் 30 எம்கே.ஐ, ஆண்டனோவா 132 டி, ஹாக் ஐ, எச்டிடி 40 உள்பட 59 விமானங்கள் சாகசம் நிகழ்த்தி வருகிறது. இது தவிர யுனைடெட் ஏர்கிராப்ட் கார்பரேஷன் நிறுவனத்தின் பேரிவ் பிஇ-200,  ஸ்வீடன் நாட்டின் ஸ்கேண்டி நேவியன், இங்கிலாந்து நாட்டின் எவோல்வேகோஸ்  உள்பட 72 விமானங்களின் சாகசம் நடக்கிறது.

கண்காட்சியில் இந்தியா உள்பட 31 நாடுகளில் இயங்கிவரும் 36 விமான தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள விமானங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் தயாரித்துள்ள நீரில் நீந்திச் செல்லும் தன்மை கொண்ட ஆம்பிபியஸ் விமானம், முதல் முறையாக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.  விமான நிலைய மைதானத்தில் 165 நாடுகளில் இயங்கிவரும் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விற்பனை 403 இடம் பெற்றுள்ளது. விமான கண்காட்சி முன்னிட்டு எலகங்கா பகுதி முழுவதும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை, கர்நாடக போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் சில
  • அமெரிக்காவை மிஞ்சும் இந்திய தேர்தல் செலவுகள்: மக்களவை தேர்தலுக்கு ரூ.73,600 கோடி?...அமெரிக்க நிபுணர் மிலன் வைஷ்ணவ் தகவல்



  • கோட் சூட் அணிந்தவர்களுக்கே தள்ளுபடி ஏழை விவசாய கடன்களை கண்டுகொள்ளாதவர் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு



  • தொகுதி, மக்களிடம் ‘பெர்பாமன்ஸ்’ சரியில்லாத 80 சிட்டிங் பாஜ எம்பிக்களுக்கு ‘கல்தா’



  • 69 சதவீத இடஒதுக்கீடு குறித்து முழு விளக்கம் அளிக்க தயார் : உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்



  • விவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்



  • காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை



  • காங். தொண்டர்கள் கொலை ஏன்? சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்



  • எரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்



  • மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்



  • கர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்?: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]