இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

5 நாள் கஸ்டடி கொடுத்து கோர்ட் உத்தரவு: பாமக பிரமுகர் கொலையில் கைதான 3 பேரிடம் போலீஸ் மீண்டும் விசாரணை

2/19/2019 3:21:51 PM
பாசிச, ஊழல் ஆட்சிகளை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு ராமநாதபுரம் தொகுதியை கேட்டு பாஜ அடம்: சிட்டிங் அதிமுக எம்.பி கலக்கம்

தஞ்சை: பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலையில் கைதான 3 பேரை போலீசார் கஸ்டடி எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிந்து திருமங்கலக்குடியை சேர்ந்த முகமது தபீக் (24), ஆவணியாபுரத்தை சேர்ந்த தவ்கித் பாட்சா (26), காரைக்காலை சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ் (31) ஆகியோரை ைகது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முகமது தபீக், தவ்கித் பாட்ஷா, முகமது ஹசன் குத்தூஸ் ஆகியோரை நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 3 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டுமென போலீசார்கேட்டுக்கொண்டனர். நீதிபதி சிவஞானம் விசாரைணை நடத்தி 3 பேரையும் வரும் 22ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் தங்கள் கஸ்டடியில் கொண்டு சென்றனர். அவர்களிடம் நேற்று முதல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்ன, அரசியல் பின்னணி உண்டா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.

மேலும் சில
  • மீஞ்சூரில் வாலிபர் படுகொலையில் 5 பேரை கைது செய்து விசாரணை: குடிபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம்



  • கூடுவாஞ்சேரியில் ஆசிரியையிடம் 7 பவுன் வழிப்பறி



  • வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது



  • க.காதலியை அபகரித்ததால் வாலிபர் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து விவசாயி கொடூர கொலை



  • விஷம் குடித்த காதலி சாவு: சித்தப்பா முறை காதலனுக்கு தீவிர சிகிச்சை



  • கொடைக்கானல் காவல்நிலைய வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜர்



  • திருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன 200 பவுன் நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்



  • போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு: சென்னையை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது



  • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி உட்பட 5 பேரிடம் விசாரணை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]