அமெரிக்க அரசில் இந்தியருக்கு உயர் பதவி
7/5/2025 3:17:31 PM
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக அமெரிக்க அரசு நியமித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வக்கீலாக பணியாற்றியவர் உத்தம் தில்லான். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான அறிவிப்பை வெள்ளை மாளிகை வட்டாரம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ளது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக உத்தம் தில்லான் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் உயர் பதவியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.