கன்னியாஸ்திரிக்கு ஆபாச எஸ்எம்எஸ் கார் டிரைவர் சிறையிலடைப்பு
6/29/2018 4:48:20 PM
திருச்சி: கன்னியாஸ்திரிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய கார் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தாடிக்காரகோணத்தை சேர்ந்தவர் பாத்திமா(48). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள கான்வென்ட்டில் கன்னியாஸ்திரியாக உள்ளார். அதே கான்வென்ட்டில் கார் டிரைவராக பணியில் இருந்தவர் உய்யகொண்டான் திருமலை வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன்(38). இவர் கடந்த வாரம் கன்னியாஸ்திரியின் செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து கன்னியாஸ்திரி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் ேபாலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த இன்ஸ்பெக்டர் சித்ரா, டிரைவர் மணிகண்டனை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.