பெல்ஜியம் பனாமா மோதல் முந்துவது யார்?
6/18/2018 4:01:39 PM
பிபா தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள பெல்ஜியம், 55வது இடத்தில் உள்ள பனாமாவுடன் இன்று இரவு 8.30 மணிக்கு சோச்சி மைதானத்தில் மோதுகிறது. உலகக் கோப்பையில் மிக நீண்ட அனுபவம் உள்ள பெல்ஜியம் 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் கால் இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
அசத்தலான வீரர்கள், மிகச் சிறந்த ஆட்டங்கள் என பெயர் பெற்றுள்ள பெல்ஜியம் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை பனாமா பெற்றுள்ளது. அறிமுக அணியாக இருந்தாலும், உலகக் கோப்பையில் மிகவும் சீனியர்கள் உள்ள அணியாக பனாமா உள்ளது. ஆகையால் எதிர்பாராத பல்வேறு திருப்பங்களை இந்த ஆட்டத்திலும் காணலாம்.