இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆசைக்கு இணங்க மனைவி மறுத்ததால் வெறி குழந்தையை சுவரில் அடித்து கொல்ல முயன்ற தந்தை கைது

6/18/2018 3:54:23 PM
33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் அருள்பாலிப்பு ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.496 உயர்ந்தது

மன்னார்குடி: மனைவி ஆசைக்கு இணங்க மறுத்ததால், குழந்தையின் கால்களைப் பிடித்து துணி துவைப்பது போல் சுவரில் அடித்து மண்டையை உடைத்த குடிகார  தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வேங்கைபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(30), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி  கோமதி(25). இவர்களது மகள் அவந்திகா(இரண்டரை வயது) வேல்முருகன் மது பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடிப்பார். வேலைக்கு  ஒழுங்காக செல்வதில்லை. குடிக்க பணம் இல்லாவிட்டால் மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து மனைவியை அடித்து உதைப்பார். நேற்றும் வேலைக்கு செல்லவில்லை.

இன்று அதிகாலை 4 மணி அளவில் வேல்முருகன் , மனைவியை உல்லாசத்துக்கு அழைத்தாராம். இதற்கு கோமதி  மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே மேலும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், தூங்கிகொண்டிருந்த குழந்தைஅவந்திகாவின் கால்களை பிடித்து துணி துவைப்பது போல சுவற்றில் அடித்தார்.  இதில் குழந்தையின் மண்டை உடைந்து உயிருக்கு போராடியது. உடனடியாக குழந்தையை தஞ்சை ராஜா மிராசுதார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

மேலும் சில
  • பள்ளிப்பட்டு அருகே சமூக விரோதிகள் கூடாரமான மகளிர் சேவை மைய கட்டிடம்



  • நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் தட்டிகேட்ட ஆசிரியருக்கு அடி, உதை



  • திருமணமான 20 நாட்களில் காதல் கணவரை உயிரோடு எரித்து கொன்ற மனைவி



  • தகாத உறவை பார்த்ததால் ஆத்திரம் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை



  • கடனை திருப்பி தராததால் ஆத்திரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் கஞ்சா பொட்டலம் பறிமுதல்



  • ஆட்டோவில் சவாரி ஏற்றுவது போல் பயணிகளிடம் திருடிய கும்பல் கைது



  • கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறி செய்த திருடர்கள் 35 பேர் சிக்கினர்



  • வனப்பகுதியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை மாவோயிஸ்ட் இயக்க மாவட்ட செயலாளர் பலி



  • கொலை செய்யப்பட்டதாக புகார்... இளம்பெண் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]