இந்தியா-பாகிஸ்தான் வீரர்களை ஒரே அறையில் பார்ப்பது அபூர்வம்: ஆண்டி ஃபிளவர் பெருமிதம்
6/1/2025 3:08:22 PM
லீட்ஸ்: கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸில் ஏற்பட்ட கடுமையான புயலால் அந்நாட்டு கிரிக்கெட் ஸ்டேடியங்கள் கடும் சேதமடைந்தன. எனவே அவற்றை சரிசெய்ய நிவாரண நிதி திரட்டும் பொருட்டு வெஸ்ட் இண்டீஸ் - உலக லெவன் அணிகளுக்கிடையே ஒரு காட்சி டி20 போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அந்த டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதும் அஃப்ரிடி தலைமையிலான உலக லெவன் அணியில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடுகிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து உலக லெவன் அணி பயிற்சியாளரும் முன்னாள் ஜிம்பாப்வே வீரருமான ஆண்டி ஃபிளவர் கூறியிருப்பதாவது: இதுவரைக்கும் பல உலக லெவன் அணிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த அணி மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம், இந்திய அணியைச் சேர்ந்த வீரர்களும், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்களும் ஒரே ட்ரெஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துகொள்வது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற சிறப்பான தருணங்கள் அடிக்கடி நடப்பதில்லை.