காரில் கடத்திய 3.34 கோடி ஹவாலா பணம் சிக்கியது
4/26/2018 2:40:21 PM
பாலக்காடு: கேரள மாநிலம் கொடுவள்ளியைச் சேர்ந்த பைஜூ (42), அர்ஷத் (21) ஆகியோர் கோவையிலிருந்து கோழிக்கோட்டிற்கு சொகுசு காரில் நேற்று ெசன்றனர். மேலாற்றூர் உச்சிரக்கடவு பாலத்தின் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்களது காரை போலீசார் தடுத்து சோதனையிட்டதில் காரின் பின்சீட்டிற்கு அடியில் ரகசிய அறையில் புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்து எண்ணியபோது ெமாத்தம் 3 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. ஹவாலா பணத்தை தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தி சென்றது ெதரியவந்தது. இது தொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்து பெருந்தல்மன்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.