கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பயங்கரம் வாலிபர் அடித்து கொலை
3/20/2018 2:59:06 PM
புழல்: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்து உடலை குடிநீர் தொட்டியில் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ெசங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கியிருந்து கட்டிட வேலை உள்பட பல்வேறு வேலைகள் செய்து வருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த அசராத் அலி (எ) டிங்கு (25) என்பவர் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. இதனால் சக தொழிலாளர்கள் அவரை தேடியபோது அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதுபற்றி செங்குன்றம் போலீசில் புகார் ெசய்தனர். இதுபற்றி புழல் உதவி ஆணையர் பிரபாகரன், செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார்,வடபெரும்பாக்கம், சாமுவேல் நகர் பகுதிக்கு சென்று வடமாநிலத்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வாலிபர், குடிபோதையில் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர், கட்டிட தொழிலாளி டிங்கு, குடிநீர் தொட்டியில் பிணமாக கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சோதனை நடத்தியபோது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் டிங்கு இறந்து கிடந்தது ெதரிந்தது.
இதையடுத்து டிங்கு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், ‘சக ெதாழிலாளியான முகமது ஆசாத்தின் மனைவியுடன் டிங்குக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது முகமது ஆசாத்துக்கு தெரியவந்ததால் டிங்குவை கண்டித்துள்ளார். இதன்பிறகும் கள்ளத் தொடர்பு தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த முகமது ஆசாத், டிங்குவை தீர்த்து கட்டியுள்ளார்’ என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து முகமது ஆசாத்தை போலீசார் கைது ெசய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.