இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஸ்டீல்மேன் ஆப் தமிழ்நாடு 2018 சென்னையில் வரும் 26ம் தேதி 4ம் ஆண்டு ஆணழகன் போட்டி

1/11/2025 4:31:02 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

சென்னை : தமிழ்நாடு மாநில அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க தலைவர் இரா.மனோகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக ‘ஸ்டீல்மேன் ஆப் தமிழ்நாடு’ என்ற ஆணழகன் போட்டி, தமிழ்நாடு மாநில அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்கத்தின் தலைவரான எனது தலைமையில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டு சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதன் 4-வது ஆண்டுக்கான ‘ஸ்டீல்மேன் ஆப் தமிழ்நாடு’ போட்டி எனது தலைமையில் வரும் குடியரசு தினத்தன்று(26ம்தேதி) வெள்ளிக்கிழமை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 55 கிலோ, 60 கிலோ, 65 கிலோ, 70 கிலோ, 80 கிலோ, 90 கிலோ, 95 கிலோ, 40 வயதை கடந்த வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளடங்கிய மொத்தம் 11 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் ரூ.5.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு எடைப்பிரிவிலும் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.25ஆயிரமும், 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.15ஆயிரமும், 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.15ஆயிரமும் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர்களை சேர்த்து அவர்களுக்கு தனியாக ஒரு ஆணழகன் போட்டி நடத்தி அதில் முதலிடம் பிடிக்கும் சாம்பியன் ஆப் சாம்பியன் வீரருக்கு ரூ.5 லட்சம் பரிசும் மற்றும் ‘ஸ்டீல்மேன் ஆப் தமிழ்நாடு 2018’ விருதும் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் இந்த போட்டியில் பரிசுத் தொகையாக மட்டுமே ரூ.10.5 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க தலைவரான எனது தலைமையில் சண்முகா டிரான்ஸ்போர்ட் செயல் இயக்குனர் புஷ்பராஜ், பிள்ளையார் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் நிர்வாக இயக்குனர் வி.கோபிலி சங்கர், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்க செயலாளர் டி.கே.குருநாதன், துணை தலைவர் ஜிம் ஜெ.பாபு, பொருளாளர் ஸ்ரீனிவாசராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இவ்வாறு இரா.மனோகர் கூறியுள்ளார்.

மேலும் சில
  • ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி



  • கோயில் நிலத்தில் தங்கப் புதையல்? ஐம்பொன் சிலை, நவரத்தின கற்கள் மீட்பு



  • ஆர்டிஓ அதிகாரிகளுக்கு தர இருந்த மாமூல் பணம் ரூ.2.77 லட்சம் பறிமுதல்: விஜிலென்ஸ் அதிரடி நடவடிக்கை



  • லாட்ஜில் அழகியுடன் டிஎஸ்பி கும்மாளம்?: எஸ்பி விசாரணை



  • ஜெ. மர்ம மரணம் விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர் சாமிநாதன் ஆஜர்: சசிகலாவின் வக்கீலும் ஆஜராகி விளக்கமளிக்கிறார்



  • ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து: அரசு பஸ்கள் இன்று காலை முதல் இயங்கின



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது



  • வைரமுத்து விவகாரம் பாஜவினர் கண்ணியம் காக்க வேண்டும்: இல.கணேசன் எம்பி பேட்டி



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு



  • ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]