இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சொகுசு கார் மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் சரண்

1/11/2025 3:48:50 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

சென்னை : சொகுசு கார் மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். சசிகலா கணவர் நடராஜன், கடந்த 1994ம் ஆண்டு லண்டனில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்துள்ளார். அந்த கார் 1994ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால், நடராஜன் போலி ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் 1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார் என்று கூறி, குறைவான சுங்கவரி செலுத்தி ₹1 கோடியே 65 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதை அறிந்த சிபிஐ, சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுஜரிதா, உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. வழக்கில் பவானி அப்ரூவராக மாறினார். பாலகிருஷ்ணன் தலைமறைவானார்.

இதையடுத்து, சிபிஐ நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு சசிகலா கணவர் நடராஜன், பாஸ்கரன் உட்பட 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடராஜன், பாஸ்கரன் உட்பட நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 4 பேருக்கும் சிபிஐ நீதிமன்றம் அளித்த 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்து, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே, வழக்கில் இருந்து தங்களுக்கு விளக்களிக்ககோரி நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் தனி, தனியாக உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்தனர். அப்போது, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, தலா ₹25 லட்சம் செலுத்தி, சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுகொள்ளலாம் என்று கூறியிருந்தது.

அதன்படி, சசிகலா கணவர் நடராஜன் சுவாச பாதுகாப்பிற்காக முகத்தில் கருவி அணிந்தபடி இன்று காலை 10.30 மணியளவில் சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்து பணம் செலுத்தியதற்கான ரசீதை தாக்கல் செய்தார். அப்போது, நீதிபதி திருநீலபிரசாத் அவரிடம் பெயர் மற்றும் முகவரிகளை கேட்டார். சுவாச பாதுகாப்பிற்காக முகத்தில் அணிந்திருந்த கருவியை எடுத்து நடராஜன் பதில் கூறினார். இதையடுத்து, நீதிபதி அரை மணி நேரம் காத்திருக்கும் படி கூறினார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நடராஜனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். ஏற்கனவே, கடந்த 3ம் தேதி நீதிபதி, பாஸ்கரனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி



  • கோயில் நிலத்தில் தங்கப் புதையல்? ஐம்பொன் சிலை, நவரத்தின கற்கள் மீட்பு



  • ஆர்டிஓ அதிகாரிகளுக்கு தர இருந்த மாமூல் பணம் ரூ.2.77 லட்சம் பறிமுதல்: விஜிலென்ஸ் அதிரடி நடவடிக்கை



  • லாட்ஜில் அழகியுடன் டிஎஸ்பி கும்மாளம்?: எஸ்பி விசாரணை



  • ஜெ. மர்ம மரணம் விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர் சாமிநாதன் ஆஜர்: சசிகலாவின் வக்கீலும் ஆஜராகி விளக்கமளிக்கிறார்



  • ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து: அரசு பஸ்கள் இன்று காலை முதல் இயங்கின



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது



  • வைரமுத்து விவகாரம் பாஜவினர் கண்ணியம் காக்க வேண்டும்: இல.கணேசன் எம்பி பேட்டி



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு



  • ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]