இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பள்ளி, கல்லூரி பஸ் டிரைவர்களை பயன்படுத்த விடுமுறை அறிவிப்பு : அரசு மீது தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு

1/11/2025 3:48:05 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

சேலம் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து, அதன் டிரைவர்களை பயன்படுத்த அரசு திட்ட மிட்டிருப்பதாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை சுமூக முறையில் முடியாததால், பஸ் ஸ்டிரைக்கில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூ உள்ளிட்ட 21 ெதாழிற்சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இன்று (11ம் தேதி) 8வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. சேலம் கோட்டத்தில், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு மிக குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. பொங்கல் விடுமுறை நாளை தொடங்குவதால், இன்று மாலை அதிகளவு மக்கள் வெளியூர் செல்ல புறப்படுவார்கள். அவர்களுக்கு உரிய பஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க கூடுதலாக தற்காலிக டிரைவர்களை பணியமர்த்த போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் கோட்ட சிஐடியு தொழிற்சங்க பொதுச்செயலாளர் செல்வகுமார் கூறியதாவது: அரசு துறைகளில் பணியாற்றும் டிரைவர்களுக்கு இணையான ஊதியத்தை கனரக வாகனமான பஸ்களை இயக்கும் எங்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதே எங்களின் முதன்மை கோரிக்கை. அதை நிறைவேற்ற அரசு முன்வராமல், பொய்யான சம்பள உயர்வு பட்டியலை தெரிவித்திருக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சர் பொய் பேசி வருகிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஐகோர்ட்டில் எங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளோம். ஆனால் அதற்கு எதிர்மறையாக அரசு நடந்து கொண்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவித்ததன் மூலம், அதன் பஸ் டிரைவர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, தனியார் கல்லூரி பேருந்துகளை வரவழைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நாளைய தினம் தனியார் கல்லூரி பஸ்களை சென்னை யில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு இயக்கவும் திட்டமிட்டுள்ளனர். மக்கள் உயிர் மீது அக்கறையின்றி அரசு செயல்படுகிறது என்றார்.

மேலும் சில
  • ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி



  • கோயில் நிலத்தில் தங்கப் புதையல்? ஐம்பொன் சிலை, நவரத்தின கற்கள் மீட்பு



  • ஆர்டிஓ அதிகாரிகளுக்கு தர இருந்த மாமூல் பணம் ரூ.2.77 லட்சம் பறிமுதல்: விஜிலென்ஸ் அதிரடி நடவடிக்கை



  • லாட்ஜில் அழகியுடன் டிஎஸ்பி கும்மாளம்?: எஸ்பி விசாரணை



  • ஜெ. மர்ம மரணம் விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர் சாமிநாதன் ஆஜர்: சசிகலாவின் வக்கீலும் ஆஜராகி விளக்கமளிக்கிறார்



  • ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து: அரசு பஸ்கள் இன்று காலை முதல் இயங்கின



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது



  • வைரமுத்து விவகாரம் பாஜவினர் கண்ணியம் காக்க வேண்டும்: இல.கணேசன் எம்பி பேட்டி



  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு



  • ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]