இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : அதிகாரிகள் 2 பேருக்கு சரமாரி அடி, உதை

1/10/2025 3:40:58 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

மீனம்பாக்கம் : சென்னை விமான நிலையத்தில் 2 அதிகாரிகளை அடித்து உதைத்த போதை ஆசாமியை கைது செய்தனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 9.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இதில் வந்த 347 பயணிகள், குடியுரிமை சோதனைக்காக வரிசையில் காத்திருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த அசோக்குமார் (32) என்பவர் வரிசையை முண்டியடித்து கொண்டு முன்னால் சென்று, தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை கொடுத்து, ‘விரைந்து சோதனை நடத்தி அனுப்புங்கள்’ என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அதிகாரிகள், ‘’ உங்களுக்கு முன்னாடி பலபேர் நிற்கிறார்கள். எனவே, வரிசையில் வாருங்கள்’ என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் அதிகாரிகளுடன் அசோக்குமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த அசோக்குமார், குடியுரிமை அலுவலகத்துக்கு புகுந்து அங்கு சோதனை நடத்தி கொண்டிருந்த அதிகாரிகள் கவுர்சிங் (45), ஆராமூதன் (40) ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அவர்கள் கதறினர். சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து அசோக்குமாரை மடக்கி  பிடித்தனர். அப்போதும் அவர்களை கீழே தள்ளிவிட்டுவிட்டு அதிகாரிகளை தாக்கினார். இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அசோக்குமாரை பிடித்து ஒரு அறையில் அடைத்துவைத்தனர். காயம் அடைந்த 2 அதிகாரிகளையும் ஆம்புலன்சில் ஏற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அசோக்குமாரை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அசோக்குமார் குடிபோதையில் இருந்தது’ தெரியவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

மேலும் சில
  • மகளை கல்லூரியில் விட சென்ற போது பயங்கரம் ரியல் எஸ்ேடட் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை



  • மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது கள்ளக்காதலன் சரமாரி அடித்து கொலை



  • கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை



  • பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை



  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]