இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மகளை கல்லூரியில் விட சென்ற போது பயங்கரம் ரியல் எஸ்ேடட் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை

1/9/2025 3:27:45 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

சென்னை: மகளை கல்லூரியில் விட சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 4 ேபர் வழிமறித்து பொது மக்கள் முன்னிலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் மேற்கு மாம்பலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் நாயக்கர்மா தெருவை சேர்ந்தவர் கந்தன்(43). ரியல் எஸ்டேட் தொழில் ெசய்து வரும் இவருக்கு, மனைவி புவனேஸ்வரி, மகள் கிருத்திகா உள்ளனர். கல்லூரியில் படித்து வரும் மகள் கிருத்திகாவை தினமும் கந்தன் தனது ஸ்கூட்டரில் விட்டுவிட்டு வருவது வழக்கம். கந்தன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் பலரிடமும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி இன்று காலை 7.30 மணி அளவில் கந்தன், தன்னுடைய மகள் கிருத்திகாவை ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். மேற்கு மாம்பலம் முத்தாலம்மன் கோவில் தெரு அருகே வரும் போது ஏற்கனவே ஆட்டோவில் மறைந்து இருந்த 4 ேபர் கொண்ட கும்பல் திடீரென கந்தன் வந்த ஸ்கூட்டரை வழிமறித்தனர்.

அப்போது கந்தன் ஏதோ அசம்பாவிதம் நடக்க ேபாகிறது என்று அறிந்து மகளை காப்பாற்ற தனது ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினார். அப்போது மர்ம நபர்கள் விடாமல் ஸ்கூட்டர் பின்னால் ஓடி வந்து கந்தனை அரிவாளால் வெட்டினர். இதில் நிலை தடுமாறி கந்தன் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். உடனே மகளை அங்கிருந்து ஓடிவிடு என்று கத்தியுள்ளார். ஆனால் மகள் கிருத்திகா தந்தையை விட்டு செல்லாமல் அலறியபடி காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்று கத்தினார். இதைபார்த்த பொதுமக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அதற்குள் மர்ம நபர்கள் கந்தனை சரமாரியாக வெட்டினர். அப்போது தந்தையை காப்பாற்ற கிருத்திகா முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கிருத்திகாவையும் வெட்டினர். இதில் அவருக்கு பலமாக வெட்டு விழுந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் கந்தன் உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அப்போது ஆத்திரம் தீராத மர்ம நபர்கள் கந்தன் இறந்ததை  உறுதி செய்து கொண்ட பின்னரே அவர்கள் தாங்கள் வந்த ஆட்டோவில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குமரன் நகர் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த கிருத்திகாவை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதை தொடர்ந்து உயிரிழந்த கந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் படுகொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கந்தன் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரேனும் கந்தனை படுகொலை செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பொது மக்கள் முன்னிலையில் நடந்த இந்த படுகொலை சம்பவம் மேற்கு மாம்பலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : அதிகாரிகள் 2 பேருக்கு சரமாரி அடி, உதை



  • மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது கள்ளக்காதலன் சரமாரி அடித்து கொலை



  • கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை



  • பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை



  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]