கேப்டவுன் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற சிறந்த வாய்ப்பு: அஜய் ஜடேஜா பேட்டி
1/5/2025 3:46:44 PM
புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியதாவது: கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்தியா தற்போது வலுவான அணியாக உள்ளது. தரமான 5 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். தென்ஆப்ரிக்க தொடர் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இருப்பினும் கேப்டவுனில் நடக்கும் முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இது அவ்வளவு சுலபமானது அல்ல. தென்ஆப்ரிக்கா கடும் சவாலாக இருக்கும். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் செஞ்சூரியன், ஜோகனஸ்பர்க் டெஸ்ட்டில் நம்பிக்கையுடன் விளையாட முடியும். வழக்கமாக தொடரின் கடைசி போட்டியில் தான் கேப்டவுனில் ஆடுவோம்.
ஆனால் இந்த முறை முதல் போட்டியையே அங்கு தொடங்குகிறோம். கேப்டவுனில் கடும் வெப்பம் நிலவுவதால் பந்து அதிக பவுன்சர் ஆக வாய்ப்பு இல்லை. எனவே கேப்டவுனில் வெற்றியுடன் இந்தியா தொடரை துவங்கும் என நம்புகிறேன். பிசிசிஐ நிர்வாகத்தில் தற்போது குழப்பமான நிலையே நீடிக்கிறது. இது துரதிஷ்டவசமானது. பிசிசிஐயை விட நாட்டில் சிறந்த விளையாட்டு அமைப்பு இருப்பதாக நான் நினைக்க வில்லை, என்றார்.