இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை கொள்ளை

12/27/2017 3:36:58 PM
ஐ.என்.எஸ்.மீடியாவில் அன்னிய முதலீடு அனுமதியில் முறைகேடு ப.சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு: அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி பத்மாவாத் திரைப்படத்துக்கு குஜராத் மாநிலத்திலும் தடை: முதல்வர் ரூபானி உத்தரவு

ஊத்துக்கோட்டை : பெரியபாளையம் அருகே விவசாயியை வெட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் (51). இவர் பூக்களை பயிரிட்டு வியாபாரம் செய்கிறார். இவரது மனைவி நிர்மலா (41). இவர்களது மகன்கள் நித்யானந்தன் (17), ருத்ரா (15). வாசுதேவனின் மாமியார் செல்லம்மாள் (62). இவர்கள் அனைவரும் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வாசுதேவன் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டுக்கு வெளியே முகமூடி அணிந்து நின்றிருந்த 2 பேர், வாசுதேவனை சரமாரியாக வெட்டிவிட்டு வீட்டுக்குள் புகுந்தனர். பலத்த காயங்களுடன் வாசுதேவன் மயங்கி விழுந்தார்.

இதன்பிறகு உள்ளே சென்ற நபர்கள், நிர்மலாவை மிரட்டி அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலி  செயினை பறித்தனர். இதை பார்த்து சத்தம் போட முயற்சித்த மாமியார் செல்லம்மாளிடம் அரிவாளை காட்டி மிரட்டினர். அவரது இடுப்பில் சொருகி வைத்திருந்த சுருக்குப் பையை பிடுங்கி, பூ வியாபாரத்துக்காக வைத்திருந்த ₹50 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். ‘’ யாரும் சத்தம் போட்டால் வெட்டி கொன்றுவிடுவேன்’’ என்று மிரட்டியவாறு முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதன்பிறகு வாசுதேவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து, வாசுதேவனை மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகாரின்படி, பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : அதிகாரிகள் 2 பேருக்கு சரமாரி அடி, உதை



  • மகளை கல்லூரியில் விட சென்ற போது பயங்கரம் ரியல் எஸ்ேடட் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை



  • மனைவியுடன் உல்லாசமாக இருந்தபோது கள்ளக்காதலன் சரமாரி அடித்து கொலை



  • கூடுவாஞ்சேரியில் 60 சவரன் கொள்ளை



  • டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்



  • ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த 8 பேர் கும்பல் அதிரடி கைது



  • தாய், மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொன்றது ஏன்? : தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்



  • போலீசார் சுற்றிவளைத்தபோது எஸ்ஐயை கத்தியால் குத்திவிட்டு கழுத்தை அறுத்துகொண்ட திருடன்



  • முள்ளங்கி கிலோ ₹ 2 விவசாயிகள் கவலை



  • ₹40 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் உட்பட 5 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]