இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாடாளுமன்றம் முடங்குவது நாட்டுக்கு நல்லதல்ல: வெங்கய்யா நாயுடு வேதனை

12/23/2017 6:01:56 PM
இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

புதுடெல்லி: நாடாளுமன்றத்தை முடக்குவது நாட்டுக்கு நல்லதல்ல என துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு கவலை தெரிவித்துள்ளார். அண்மையில் குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பொது கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, குஜராத்தில் பாஜவை தோற்கடிக்க பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தியதாக குற்றம் சாட்டினார். இதற்கு காங்கிஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எழுப்பப்பட்டது. இந்த பிரச்னையை முன்வைத்து கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றத்ைத காங்கிரஸ் முடக்கி வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசியதாவது:
உலக அளவில் தலைசிறந்த பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்க தொடர் முயற்சிகள் மேற்ெகாள்ளப்பட வேண்டும். இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நாம் விரைந்து எட்ட வேண்டும். இந்த நிலையில் நாடாளுமன்ற அலுவல்கள் தொடா்ந்து முடங்குவது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல.

ஒரு காலத்தில்உலக அளவிலான உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 27 சதவீதமாக இருந்தது. எனவே தற்போதுள்ள 7.5 சதவீத வளர்ச்சியை இரட்டை இலக்கமாக உயர்த்த அனைவரும் பணியாற்ற வேண்டும். உலக அளவில் முன்னேற்றம் காணும் பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. இதற்கு நம்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களும் பொது மக்களின் பங்களிப்பும் முக்கிய காரணங்களாகும். ஜிஎஸ்டி அமலாக்கம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்ட நடவடிக்கைகளால் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு சூழல் மேம்பட்டுள்ளன. பெரிய அளவில் முதலீடுகளும் கிடைத்து வருகின்றன. இவ்வாறு வெங்கய்யா பேசினார்.

மேலும் சில
  • காஷ்மீரில் போலீசார் அதிரடி : என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை



  • இந்திய கம்யூனிஸ்ட் தொடக்க விழா மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து



  • ஜெ.தீபா வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்



  • காங்கிரசை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார் ராகுல் : சிவசேனா கருத்து



  • பஞ்சாப் எல்லையில் 13.5 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல்



  • குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து



  • ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் சிறப்பு பொருளாதார மாநாடு : பிரதமர் மோடி சிறப்புரை



  • காஷ்மீரில் தீவிரவாதிகளாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



  • குஜராத் முதல்வராக விஜய் ரூபானி நாளை மறுதினம் பதவியேற்கிறார்



  • 2ஜி தீர்ப்பினால் பாஜவின் சாயம் வெளுத்து விட்டது: ராகுல்காந்தி பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]