இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது

12/22/2017 3:35:01 PM
இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான வாக்குப்பெட்டிகள் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கி, காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியானதாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு நேற்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வாக்குப்பதிவுகள் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. ஆனால், நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. வாக்குப்பதிவு முடியும் மாலை 5 மணிக்கு கூட சுமார் 100 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்போட அதிகளவில் பெண்கள் கூட்டம் காணப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு மையங்கள் மாலை 5 மணிக்கு மூடப்பட்டு, 5 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று இரவு 7 மணிக்கு பிறகும் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆர்.கே.நகர் தொகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் நேற்று இரவு 8 மணிக்கு மேல் ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தமுள்ள 258 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் அனைத்துக்கும் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் லாரியில் ஏற்றப்பட்டு துைண ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சென்னை, கடற்கரை பகுதி காமராஜர் சாலையில் அமைந்துள்ள ராணி மேரி பெண்கள் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, ஒதுக்கப்பட்ட அறையில் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நேற்று இரவு வைக்கப்பட்டு, அந்த அறை முழுவதும் உள்ள கதவுகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரியில் துணை ராணுவ வீரர்கள் 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அந்த அறைக்கு வெளிபகுதியை சுற்றியும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் ஏஜென்டுகளும் வெளியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ராணி மேரி கல்லூரி வளாகத்துக்கு வெளியேயும் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.ேக.நகர் தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் காலை 8 மணிக்கு, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டித்தில் வைத்து எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் பதிவு செய்ய தனித்தனி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனி மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்பட்டு அவர்களது முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதைத்தொடர்ந்து 8.20 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மேஜைக்கு பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு, வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெறும். நாளை மறுதினம் காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்பட்சத்தில், காலை 9 மணிக்கெல்லாம் முதல் சுற்று முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி, காலை 9 மணிக்கெல்லாம் எந்த வேட்பாளர் முன்னிலையில் உள்ளார் என்ற நிலவரம் பொதுமக்களுக்கு தெரிந்துவிடும்.

நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, வேட்பாளர்களின் ஏஜென்டுகள், பத்திரிகையாளர்கள் தவிர மற்றவர்கள் யாரும் மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது. ஒவ்வொரு சுற்று வாக்கு முடிவுகளையும் பொதுமக்களுக்கு தெரிவிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஜெயலலிதா மறைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்து, காலியாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் தற்போது தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நாளை மறுதினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெறப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள பொதுமக்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

மேலும் சில
  • சுனாமி 13ம் ஆண்டு நினைவு தினம் : கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி



  • மூன்றரை யூனிட் மணல் ரூ.40 ஆயிரம் : கட்டிட பணி முற்றிலும் முடங்கும் அபாயம்



  • நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை நோக்கிய வகுப்புகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது



  • ஆர்.கே.நகர் தோல்வியால் அதிமுக அழிந்து விடாது



  • ஜிஎஸ்டியால் சம்பளம் குறைப்பு எதிரொலி : திண்டுக்கல்லில் 10 ஆயிரம் நெசவாளர்கள் ஸ்டிரைக்



  • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு இன்று கேரளா வருகை



  • புழல் சுடுகாட்டில் பரபரப்பு : வங்கி ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் எரிப்பு



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் டோக்கன் வழங்காத தகராறில் கூலி தொழிலாளிக்கு சரமாரி அடிஉதை



  • இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி



  • பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர் கூட்டத்தில் பஸ் புகுந்தது 6 பேர் உடல் நசுங்கி சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]