டெல்லியில் இளம் பெண்ணை 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம்
12/22/2017 3:22:40 PM
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 22 வயது இளம்பெண் ஒருவர் 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் கூட்டாக பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜானகிபுரியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 18வயது நிரம்பாத இளைஞருடன் நட்பாக பழகினார். நேற்று அந்த இளைஞர் தனது வீட்டில் பார்ட்டி இருப்பதாக அந்த பெண்ணுக்கு அழைப்பு விடுத்தார். பார்ட்டியில் அந்த இளைஞரின் நண்பர்கள் என மொத்தம் 5 பேர் இருந்தனர்.
இதில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் 18வயது நிரம்பாத இளைஞர்கள். அந்த பெண்ணுக்கு மதுவை ஊற்றி கொடுத்த இளைஞர்கள் அவரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மாறி மாறி சுமார் 5 மணி நேரம் கூட்டாக பலாத்காரம் செய்தனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டினர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். இதை தொடர்ந்து அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.