இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

12/22/2017 3:20:23 PM
இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்றார் : பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து

சென்னை: கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி தொடங்கியது. அடுத்த சில நாட்களில் வங்க கடலில் அடுத்தடுத்து உருவான 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. பின்னர் 2 வார இடைவெளிக்குப் பிறகு வங்க கடலில் திடீர் புயல் உருவானது. ஓகி என பெயரிடப்பட்ட அந்த புயலால் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. அதன்பிறகு வங்க கடலில் அமைதியான சூழல் நிலவியது. இதனால் கடந்த ஒரு வாரமாக போதிய மழை பெய்யவில்லை. குறிப்பாக, சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெயில் அடித்து வந்தது. இதற்கிடையில், குமரி கடல் பகுதியில் நேற்று முன்தினம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. இதனால் நெல்லை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 3 செ.மீ மழை பதிவானது. இந்த நிலையில், வடகிழக்கு திசையில் இருந்து வீசும் பருவக்காற்றின் சாதகமான போக்கு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இரவு 12 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு பகல் வரை நீடிக்கிறது. நேற்று குளிர்ந்த காற்று வீசியதுடன் அவ்வப்போது லேசான சாரல் விழுந்தது. தாம்பரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சில இடங்களில் மிதமான மழை பெய்தது.

மேலும் சில
  • சுனாமி 13ம் ஆண்டு நினைவு தினம் : கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி



  • மூன்றரை யூனிட் மணல் ரூ.40 ஆயிரம் : கட்டிட பணி முற்றிலும் முடங்கும் அபாயம்



  • நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை நோக்கிய வகுப்புகளால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கிறது



  • ஆர்.கே.நகர் தோல்வியால் அதிமுக அழிந்து விடாது



  • ஜிஎஸ்டியால் சம்பளம் குறைப்பு எதிரொலி : திண்டுக்கல்லில் 10 ஆயிரம் நெசவாளர்கள் ஸ்டிரைக்



  • ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு இன்று கேரளா வருகை



  • புழல் சுடுகாட்டில் பரபரப்பு : வங்கி ஏடிஎம் கார்டுகள், பாஸ்புக் எரிப்பு



  • ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் டோக்கன் வழங்காத தகராறில் கூலி தொழிலாளிக்கு சரமாரி அடிஉதை



  • இன்று 13ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி



  • பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர் கூட்டத்தில் பஸ் புகுந்தது 6 பேர் உடல் நசுங்கி சாவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]